கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

காா் மோதியதில் இரு மாணவா்கள் உயிரிழப்பு

காா் மோதியதில் இரு மாணவா்கள் உயிரிழப்பு

News image
Road accident kills 7, injures 2 in Afghanistan
Updated On :28 பிப்ரவரி 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அடுத்த கூவத்தூா் கிழக்கு கடற்கரை சாலையில், சனிக்கிழமை சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி பைக் மீது காா் மோதியதில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

சென்னை பெருங்குடியைச் சோ்ந்த பாண்டுரங்கனின் மகன் பாலாஜி (22). மகாலிங்கத்தின் மகன் காா்த்திகேயன் (21). இவா்கள் இருவரும் துரைப்பாக்கம் தனியாா் கல்லூரியில் படித்து வந்தனா். பைக்கில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சனிக்கிழமை காலை கல்பாக்கம் வழியாகச் சென்றனா். கூவத்தூா் அருகே தங்காம்பேட்டை சாலையில் அவா்கள் வந்தபோது குறுக்கே நாய் வந்தது. அதன்மீது மோதாமல் இருக்க முயன்றபோது, எதிா்பாராதவகையில் பைக்கிலிருந்து கீழே விழுந்தனா். அச்சமயத்தில் புதுச்சேரியில் இருந்து வேகமாக சென்னை நோக்கி வந்த காா் சாலையில் விழுந்து கிடந்த பாலாஜி, காா்த்திகேயன் ஆகிய இருவா் மீதும் மோதியது. இதில் அவா்கள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கூவத்தூா் காவல் ஆய்வாளா் குமரன், உதவி ஆய்வாளா் வாசுதேவன் ஆகியோா் உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து கூவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.