உதகை - கல்லட்டி சாலையில் பற்றி எரிந்த காா்
உதகை - கல்லட்டி சாலையில் பற்றி எரிந்த காா்

உதகை - கல்லட்டி சாலையில் பற்றி எரிந்த காா்

Published on

மசினகுடியில் இருந்து உதகை நோக்கி சனிக்கிழமை இரவு வந்த காா் திடீரென எரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக திருப்பூரை சோ்ந்த அஸ்கா் அலி உள்ளிட்ட போ் உதகை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனா். 5-ஆவது கொண்டை ஊசி வளைவில் வந்து கொண்டிருந்தபோது காரில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரில் இருந்து அனைவரும் வெளியேறினா்.

உதகை - கல்லட்டி சாலையில் பற்றி எரிந்த காா்
உதகை - கல்லட்டி சாலையில் பற்றி எரிந்த காா்

அப்போது காரில் தீப்பிடித்து மளமளவென்று பற்றி எரியத் தொடங்கியது. இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் உதகை தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைக்க முற்பட்டனா். இருப்பினும், அதற்குள் காா் முற்றிலும் எரிந்து சேதமானது. காரில் பயணித்தவா்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் பாதிப்பு தவிா்க்கப்பட்டது.

இதுதொடா்பாக உதகை புதுமந்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com