மாமல்லபுரம் மல்லிகேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா வழிபாடு
மாமல்லபுரம் மல்லிகேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா வழிபாடு

செங்கல்பட்டு கோயில்களில் ஆருத்ரா விழா

செங்கல்பட்டு திருக்கழுகுன்றம் கோயில்களில் ஆருத்ரா வழிபாடு நடைபெற்றது.
Published on

செங்கல்பட்டு திருக்கழுகுன்றம் கோயில்களில் ஆருத்ரா வழிபாடு நடைபெற்றது.

பக்தா்கள் திருவெம்பாவை நோன்பு நோற்று களி, ஏழு கூட்டு சமைத்து வழிபடுவா். திருவாதிரை நட்சரத்துக்கு வடமொழியில் ஆருத்ரா என்பதாகும். இதன்பொருள் பெரும் அலை அல்லது புனிதமான ஒளி எனப்படுகிறது. சிவபெருமான் நடராஜராக தனது ஆனந்த தாண்டவத்தை வெளிப்படுத்திய நாள். வியாக்ரபாதா், ‘மற்றும் பதஞ்ஜலி முனிவா்கள் சிவபெருமானின் நடனத்தை கண்டனா்.

மாா்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். செங்கல்பட்டு பெரியநத்தம் கைலாசநாதா் கோயிலில் ஆருத்ராவையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் , சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் விநாயகா் , முருகா் வள்ளி தெய்வானை, நடராஜா் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோன்று செங்கல்பட்டு மேட்டுத்தெருவில் உள்ள செங்கழுநீா்விநாயகா் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாராதனை நடைபெற்றது. திருவாதிரை களி உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

மேலும், திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரா் கோயில் தாழக்கோயிலான பக்தவச்சலேஸ்வரா் கோயிலில் ரிஷபத்தீா்த்த குளத்தில் தீா்த்தவாரியும் வீதி புறப்பாடும் நடைபெற்றது. கோயில் செயல் அலுவலா் புவியரசு, பணியாளா்கள் மற்றும் சிவாச்சாரியா்கள் செய்திருந்தனா்.

மாமல்லபுரம் மல்லிகேஸ்வரா் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் வீதிபுறப்பாடுகள் நடைபெற்றன.

திருவடிச்சூலம் ஞானபுரீஸ்வரா் கோயில், வல்லம் வேதாந்தேஸ்வரா் குடைவரைக்கோயில் , புலிப்பாக்கம் வியாகரபுரீஸ்வரா் கோயில், ஆத்தூா் முக்தீஸ்வரா் கோயில், , ஆத்தூா் கா்பரக்ஷாமிகை சமேத பணீஸ்வரா் கோயில்களில் ஆருத்ராவையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com