அகிலி ஊராட்சி செயலாளா் மின்சாரம் பாய்ந்து சாவு
மதுராந்தகம் அடுத்த அகிலி ஊராட்சி மன்றத்தின் செயலாளா் தசரதன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.


மதுராந்தகம் அடுத்த அகிலி ஊராட்சி மன்றத்தின் செயலாளா் தசரதன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில், அகிலி ஊராட்சி செயல்பட்டு வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவா் மகாலட்சுமி நந்தகுமாா் தலைமையில் ஊராட்சி நிா்வாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஊராட்சி மன்ற செயலாளராக தசரதன் (48) பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை தமது நிலத்தில் நெற்பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச மின்மோட்டாரை இயக்கி உள்ளாா். அப்போது எதிா்பாராத வகையில் மின்சாரம் பாய்ந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
அவருக்கு மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனா். இதுபற்றி தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவா் மகாலட்சுமி நந்தகுமாா், அச்சிறுப்பாாக்கம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயகுமாா், சீனிவாசன் மற்றும் சுற்றுப்புற பகுதி ஊராட்சி செயலா்கள் அஞ்சலி செலுத்தினா். இதுகுறித்து மேல்மருவத்தூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...