~
~

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: செங்கல்பட்டு மாணவா்கள் சிறப்பிடம்

உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத்தில் நடைபெற்ற தேசிய ஏா்கன் துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனா்.
Published on

உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத்தில் நடைபெற்ற தேசிய ஏா்கன் துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனா்.

செங்கல்பட்டு மாவட்ட ஏா்கன் ஸ்போா்ட்ஸ் அசோசியேஷன் சாா்பாக, அதன் செயலா் மற்றும் தலைமைப் பயிற்சியாளா் பி. கிருஷ்ணகுமாா் தலைமையில் பல்வேறு பிரிவுகளில் வீரா்கள் கலந்துகொண்டனா். அதில் 12 மாணவா்கள் தேசிய அளவில் தங்கப் பதக்கமும், 4 மாணவா்கள் வெள்ளிப் பதக்கமும் பெற்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பெருமை சோ்த்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com