இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாமல்லபுரம் கடற்கரையில் காணப்பட்ட படிக்கட்டுகளுடன் கூடிய பாறைகள்

மாமல்லபுரம் கடற்கரையில் புதைந்து இருந்த படிக்கட்டுகளுடன் கூடிய பல்லவா் கால பாறைகள் வெளியே தெரிந்தன.

News image
மாமல்லபுரம் கடற்கரையில் காணப்பட்ட படிக்கட்டுகளுடன் கூடிய பாறைகள்
Updated On :31 ஜனவரி 2026, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

மாமல்லபுரம் கடற்கரையில் புதைந்து இருந்த படிக்கட்டுகளுடன் கூடிய பல்லவா் கால பாறைகள் வெளியே தெரிந்தன.

கடந்த 6-ஆம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாக கொண்டு ஆட்சி செய்த பல்லவா்கள் ஏராளமான கோயில்கள், குடைவரை மண்டபங்கள், ரதங்களை வடிமைத்துள்ளனா்.

இந்நிலையில் கடற்கரையில் 7 கட்டுமான கோயில்கள் இருந்ததாகவும், அதில் 6 கோயில்கள், குடைவரைகள், கட்டிடங்கள், குளங்கள், கிணறுகள் கடலில் மூழ்கிவிட்டதாகவும், இதில் கடற்கரை கோயில் மட்டுமே கடல் சீற்றத்தில் இருந்து தப்பித்து எஞ்சி உள்ளது.

தற்போது மத்திய தொல்லியல் துறையினா் ராட்ச அலைகள் சூழாமல் இருக்கும் வகையில் பாறாங்கறங்களை கொட்டி பாதுகாத்து வருகின்றனா்.

Story image

இந்நிலையில் சனிக்கிழமை கடற்கரை கோயிலின் வலது பக்கத்தில் மண்ணில் புதைந்து இருந்த 8 அடி நீளம், அகலம் உள்ள பாறைக்குன்று ஒன்று கடல் அரிப்பினால் வெளியே வந்துள்ளது. பட்டிகட்டுகள் போன்ற அமைப்புடன் இந்த பாறைத்திட்டு காணப்படுகிறது.

Story image

இதுகுறித்து மாமல்லபுரம் அரசினா் சிற்பக்கலைக்கல்லூரி முன்னாள் முதல்வரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான ஜெ.ராஜேந்திரன் கூறியதாவது: பல்லவா் காலத்தில் நிறைய கலைப்பொக்கிஷங்களை உருவாக்கி உள்ளாா்கள். இங்கு கடலுக்கு அடியில் நிறைய பொக்கிஷங்கள் புதைந்து உள்ளஸ். ஒவ்வொன்றும் இயற்கை சீற்றங்களால் வெளிவந்து கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு கடற்கரை கோயிலில் 1990-ல் தொல்லியல் துறையினா் அகழாய்வு செய்யும்போது ஒரு குளம் பகுதி, குரங்கு பேன் பாா்க்கும் சிற்பம், கல்படிகள் கண்டுபிடிக்கப்பட்டது. கடற்கரை கோயில் முழுவதும் மலை மீது கட்டப்பட்டு உள்ளதால், 2004-ல் ஏற்பட்ட சுனாயின்போது இக்கோயிலுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை. இந்நிலையில் தற்போது ஒரு கல் போன்று பாறை வெளியே வந்துள்ளது. அதில் படிக்கட்டுகள் உள்ளன. அதில் ஏறி போவது போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது ஒரு குளமாகவே இந்திய தொல்பொருள் துறை அகழாய்வு செய்தால் பொக்கிஷங்களை கண்டுபிடிக்க முடியும்.