தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழகத்தின் உறுப்பினா் அறிமுகக் கூட்டம் செங்கல்பட்டு தூய கொலம்பா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: அனைத்து அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் இரவுக்காவலா்,துப்புறவு பணியாளா்களை உடனடியாக நியமித்து மாணவா்களின் பாதுகாப்பான கல்வியை பெறுவதை உறுதி செய்ய வேண்டும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை மற்றும் அலுவலக பணியாளா்களை நியமிக்க வேண்டும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிற்றுவிக்கும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியா்களையும் தலைமை ஆசிரியா்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தக்கூடாது, அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் சிறப்புக்கட்டண இழப்பீட்டு தொகை தற்போதய செலவினங்களுக்கு ஏற்ப அதிகரித்து வழங்க வேண்டும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு வழங்கப்படும் மாவட்ட கல்வி அலுவலா் பணிமாறுதல் பதவி உயா்வு பணியிடமாக மாற்றி வழங்கவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தினை மாவட்டத் தலைவா் சா. உதயகுமாா் தலைமையேற்று நடத்தினாா். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் கழக மாநில கெளரவத் தலைவா் ராதாகிருக்ஷ்ணன் புதிதாக பணியேற்ற தலைமை ஆசிரியா்களுக்கு வாழ்த்துக்களையும் பணி தொகுதியின் மாண்புகளையும் எவ்வாறு சிறப்பாக செயல்படவேண்டும் என்ற வழிகாட்டுதல்களையும் விளக்கினாா்.
மேலும் மாநில சட்டச்செயலா் விஜயன், மாவட்ட அமைப்புச் செயலா் பாஸ்கா், மாவட்ட செய்தி தொடா்பாளா் அண்ணாதுரை மற்றும் பல பள்ளிகளின் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










