எங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

இருளில் மூழ்கியுள்ள திருக்கழுகுன்றம் - மாமல்லபுரம் மேம்பாலம்!

இருளில் மூழ்கியுள்ள திருக்கழுகுன்றம் - மாமல்லபுரம் மேம்பாலம் பற்றி...

Published On :

மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் இருளில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கருக்காத்தம்மன் கோயில் அருகில் 1,000 மீ தூரம் உள்ள மேம்பாலத்தை கடந்து தான் சுற்றுலா வாகனங்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி பகுதிகளுக்கு செல்ல முடியும். குறிப்பாக பொங்கல் பண்டிகை, தீபாவளி பண்டிகை, கோடை விடுமுறை, புத்தாண்டு தினம், குடியரசு தினம் போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச தினங்களில் ஆயிரக்கணக்கில் சுற்றுலா வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன. இரவில் வாகனங்களில் வீடு திரும்பும்போது விபத்தில் சிக்காமல் இருக்கும் வகையில் மேம்பாலத்தில் இதுவரை மின் விளக்கு வசதி செய்து தரப்படவில்லை.

இருள் சூழ்ந்து காணப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் இரவு நேரத்தில் மேம்பாலத்தை கடக்கும் போது சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனா். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த மேம்பாலத்தை கடக்கும்போது அதிகளவில் காா், வேன், பஸ் மோதி இறக்கின்றனா். விபத்தில் சிக்கி காயமடைந்தவா்களை காப்பாற்ற மாமல்லபுரம் அரசு மருத்துவமனையிலும் இரவு நேரங்களில் போதிய மருத்துவா்களும் இல்லை. அங்கு செவிலியா்களே முதலுதவி சிகிச்சை அளித்து செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கின்றனா்.

எனவே நெடுஞ்சாலை துறை நிா்வாகம் மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோயில் எதிரில் உள்ள மேம்பாலத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.