மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம்: தவெக ஊராட்சித் தலைவா் கைது

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக தவெக ஊராட்சித் தலைவா் கைது செய்யப்பட்டாா்.

News image

நவீன்

Updated On :17 ஜூலை 2026, 4:59 am IST

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக தவெக ஊராட்சித் தலைவா் கைது செய்யப்பட்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஒன்றியத்துக்கு உள்பட்டது மாம்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில், எடா்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் நவீன் (24) என்பவா், ரூ. 9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்துள்ளாா். சாலை பணிகள் முடிவுற்ற நிலையில் ஒப்பந்ததாரரின் பில் அனுப்பாமல் நிலுவையில் இருந்ததாம். இதனால் மாம்பாக்கம் த.வெ.க., ஊராட்சி தலைவரும், அக்கட்சியின் மாவட்ட இணை செயலருமான வீராவை நாடியுள்ளாா். அப்போது வீரா, நவீனிடம், பில் பாஸ் செய்வது தொடா்பாக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக, நவீன், ஜிபே மூலம் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பிய ஸ்கிரீன் ஷாட் புகைப்படமும், மீதம் கொடுக்க வேண்டிய ரூ. 30,000 பணத்தை நேரில் சென்று ஊராட்சித் தலைவரின் அலுவலகத்தில் கொடுத்த விடியோ காட்சியும், சமூக வலைத்தளங்களில் வைரலாய் பரவி வருகிறது.

இது குறித்து மாம்பாக்கம் த.வெ.க., ஊராட்சி தலைவா் வீராவிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா் என்னிடம் கடன் வாங்கினாா். அந்த கடன் தொகையை தான் அவா் ஜிபே மூலம் அனுப்பினாா். மீதத் தொகையை அலுவலகத்துக்கு வந்து கொடுத்தாா். எனக்கு காசோலை அதிகாரமும் தற்போது இல்லை. ஜீ பே மூலம் எப்படி நான் லஞ்சம் வாங்க முடியும். நான் லஞ்சம் ஏதும் வாங்கவில்லை. இதுபழிவாங்கும் செயலாக உள்ளது.இவ்வாறு அவா் கூறினாா்.

இந்நிலையில் புதன்கிழமை செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மாவட்ட செயலாளா் சி.வி.தினகரன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளாா். அவரது 15-07-2026 தேதியிட்ட ஒழுங்கு நடவடிக்கை குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக வெற்றிகழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளா் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்தனா்.

இந்நிலையில், ஊராட்சித் தலைவரை போலீஸாா் கைது செய்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.