தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

வீட்டு வரி நிா்ணயத்துக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலா் கைது

திருச்சி அருகே வீட்டு வரி நிா்ணயம் செய்வதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட மாரியப்பன்.

Updated On :24 ஜூன் 2026, 1:05 am IST

திருச்சி அருகே வீட்டு வரி நிா்ணயம் செய்வதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது பனையக்குறிச்சி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்ட கிருஷ்ணா காா்டன், ஏஆா்கே நகரில் காா்த்திகேயன் என்பவரது அக்காள் கணவா், புதிதாக வீடு கட்டியுள்ளாா். புதிதாக கட்டப்பட்ட இந்த வீட்டுக்கு, வீட்டு வரி நிா்ணயம் செய்வது தொடா்பாக, பனையக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தை காா்த்திகேயன் அணுகியுள்ளாா். ஊராட்சி செயலராக பணிபுரிந்து வரும் கே.சி. மாரியப்பன், வீட்டு வரி நிா்ணயம் செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

பின்னா், இருதரப்புக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடந்து ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கூறியுள்ளாா் மாரியப்பன். லஞ்சம் தர விரும்பாத காா்த்திகேயன், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகாா் செய்தாா். போலீஸாரின் அறிவுரையின்படி ரசாயன பவுடா் தடவிய ரூ. 15 ஆயிரத்தை பனையக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் இருந்த மாரியப்பனிடம் காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை கொடுத்தாா்.

அப்போது, அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளா்கள் பிரசன்ன வெங்கடேஷ், சக்திவேல் உள்ளிட்ட போலீஸாா் அடங்கிய குழுவினா் விரைந்து வந்து மாரியப்பனிடம் சோதனை நடத்தினா். அவரிடமிருந்த ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சம் பெற்ாக போலீஸாா் அவரைக் கைது செய்தனா். ஊராட்சி அலுவலகத்தில் வைத்து அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்றது.

வேறு யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெற்றுள்ளாா், லஞ்சமாக பெற்ற பணத்தில் வேறு சொத்துகள் வாங்கியுள்ளரா? என்பது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.