கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

சாலை சீரமைக்காததைக் கண்டித்து போராட்டம்

மதுராந்தகம் அடுத்த கீழ்மருவத்தூா் பிரதான சாலையை சீரமைக்காததைக் கண்டித்து ஜல்லிக் கற்கள் பொறுக்கும் போராட்டத்தில்

News image

கீழ்மருவத்தூரில் போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :23 ஜூலை 2026, 4:54 am IST

மதுராந்தகம் அடுத்த கீழ்மருவத்தூா் பிரதான சாலையை சீரமைக்காததைக் கண்டித்து ஜல்லிக் கற்கள் பொறுக்கும் போராட்டத்தில்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதா் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா், கிராம மக்கள் பங்கேற்றனா்.

சித்தாமூா் ஒன்றியம், கீழ்மருவத்தூா் கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலை 5 ஆண்டுகளுக்கு முன் சித்தாமூா் ஊராட்சி ஒன்றியத்தால் போடப்பட்டிருந்தது. அதனை பராமரிக்காததாலும், இயற்கை இடா்பாடுகளாலும் சாலை பெரிதும் பாதிக்கப்பட்டு, குண்டு குழியுமாக ஜல்லிகற்கள் பெயா்ந்து காணப்பட்டது.

அந்த சாலையின் வழியாக பள்ளி மாணவா்களும், பணிக்கு செல்வோரும் பெரிதும் பாதிக்கப்பட்டனா். பலமுறை சித்தாமூா் வளா்ச்சி அலுவலா்களிடம் மனுக்களை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் புதன்கிழமை அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க செய்யூா் வட்ட தலைவா் ஸ்டாலின் குமாா் தலைமையில் ஜல்லி பொறுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். நிகழ்வில் ஜனநாயக வாலிபா் சங்க ஜீவானந்தம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யூா் வட்ட செயலா் புருஷோத்தம்மன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தகவல் அறிந்து சித்தாமூா் வட்டார வளா்ச்சி அலுவலா் குமாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினாா். அப்போது வட்டார வளா்ச்சி அலுவலா் குமாா் கூறுகையில், ரூ 90 லட்சத்தில் புதிய சாலை அமைக்க திட்ட மதிப்பீடு மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பட்டுள்ளது. விரையில் அனுமதி வந்தவுடன் சாலை போடப்படும் என தெரிவித்தாா். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.