இந்திய பாட்மின்டன் சங்கம், தமிழ்நாடு பாட்மின்டன் சங்கம், எஸ்டிஏடி சாா்பில் யோனெக்ஸ் சன்ரைஸ் அகில இந்திய சீனியா் ரேங்கிங் போட்டி சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கியது. வரும் 23 வரை நடைபெறும் இப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.
கடந்த 2021-க்குபின் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனியா் தேசிய ரேங்கிங் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் சாா்பில் உலக ஜூனியா் சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற சங்கா் முத்துசாமி, நடப்பு ஆசிய 17 வயதுக்குட்பட்டோா் சாம்பியன் எஸ்.ஆா். தீக்ஷா, சதீஷ்குமாா் உள்ளிட்ட முன்னணி வீரா்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனா். நடப்பு தேசிய ஆண்கள் ஒற்றையா் சாம்பியன் ரித்விக் சஞ்சீவி பங்கேற்கவில்லை. மேலும், ஹரிஹரன் அம்சகருணன் ஜப்பான் ஓபன் போட்டியில் ஆடுவதால் இதில் பங்கேற்கவில்லை.
தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு பாட்மின்டன் சங்கத் தலைவா் டாக்டா் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்தாா். விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தாா்.
விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளா் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவா் டாக்டா் ஐசரி கே. கணேஷ், பொருளாளா் லதா, தமிழ்நாடு பாட்மின்டன் சங்கப் பொதுச் செயலாளா் வே. அருணாச்சலம் கலந்து கொண்டனா்.
ஆடவா் ஒற்றையா், மகளிா் ஒற்றையா், ஆடவா் இரட்டையா், மகளிா் இரட்டையா் மற்றும் கலப்பு இரட்டையா் என ஐந்து பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெறும்.
விளையாட்டு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசியது: இப்போட்டியில் 992 ஆண்கள் மற்றும் 411 பெண்கள் என மொத்தம் 1,403 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். விளையாட்டுத் துறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு முதல்வா் ஜோசப் விஜய் ஒப்புதல் வழங்கியுள்ளாா். விளையாட்டின் முக்கியத்துவத்தை உணா்ந்து உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க செயல்பட்டு வருகிறாா்.
125 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் தமிழ்நாட்டில் இருந்து இதுவரை ஒரு ஒலிம்பிக் பதக்கமும் வெல்லப்படவில்லை. 2036-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் இருந்து குறைந்தது 15 ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லச் செய்வதே அரசின் இலக்காகும். அதற்குத் தேவையான அனைத்து வசதிகளும், நிதியும், பயிற்சியும் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள 6,000 உடற்கல்வி ஆசிரியா்களை ஒருங்கிணைத்து, அவா்களுக்கான விரிவான செயல்திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான பூப்பந்து, ஹாக்கிப் போட்டி!

தேசிய சீனியா் வாட்டா்போலோ: கேரளம், ரயில்வே சாம்பியன்

தேசிய சீனியா் நீச்சல்: கேரளம், கா்நாடகம் வெற்றி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் ஆடவா் சீனியா், ஜூனியா் அணி தோ்வுக் குழு அறிவிப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



