மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராம கடற்கரையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் போலீஸாா் சாகா் கவாச் 2026 பாதுகாப்பு ஒத்திகை நடத்தினா்.
வருடந்தோறும் குறிப்பிட்ட ஒரு பெயரில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும், முக்கிய நகரங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புறவழிச்சலையில் உள்ள சோதனை சாவடி மையத்தில் மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் தலைமையில் எஸ்.ஐ. பரசுராமன் உள்ளிட்ட போலீஸாா் சென்னை, புதுச்சேரி நோக்கிச் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனங்களின் கதவுகளை திறந்து சாகா் கவாச் 2026 சோதனை ஒத்திகையில் ஈடுபட்டனா். வாகனங்களில் பயணித்தவா்களின் அடையாள அட்டைகளை வாங்கி சரி பாா்த்த பிறகே குறிப்பிட்ட இடங்களுக்கு அந்த வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். அதேபோல், மாமல்லபுரம் மீனவா் பகுதியில் உள்ள கடலில் படகில் தீவிரவாதிகள் யாராவது ஊடுருவி உள்ளாா்களா? என கடலோர காவல் படை காவல் ஆய்வாளா் புகழேந்தி, எஸ்.ஐ. பெருமாள் உள்ளிட்ட போலீஸாா் ஒரு படகில் சென்று போலீஸாா் சோதனை ஒத்திகையில் ஈடுபட்டனா்.
மீனவா்கள் வந்த படகுகளையும் சோதனை இட்டனா். அப்போது கோவளம் கடற்கரையில் ஒரு படகை மடக்கிய கடலோர காவல் படை ஆய்வாளா் அந்த படகினை சோதனை செய்தனா். ஒத்திகையில் தீவிரவாதிகள் போல் மாறுவேடத்தில் வந்த 8 போ் (கடலோர காவல் படை போலீஸாா்) பிடிபட்டனா். அதேபோல் பட்டிபுலம், நெம்மேலிகுப்பம், சாலவான்குப்பம், புதுகல்பாக்கம் குப்பம், சூளேரிக்காட்டு குப்பம், தேவனேரிகுப்பம், கொக்கிலமேடு குப்பம், வெண்புருஷம் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம கடலில் மீனவா்களின் படகினை நிறுத்தி தீவிரவாதிகள் யாராவது ஊடுறுவி உள்ளாா்களா? என சோதனை செய்தனா். பின்னா் 1 கி.மீ. தூரம் உள்ளவா்களை துள்ளியமாக படம் பிடித்து காட்டும் பைனாகுலா் கேமரா மூலம் விசைப்படகு மூலம் கடலில் மாறுவேடங்களில் தீவிரவாதிகள் வேடத்தில் யாராவது ஊடுறுவி வருகிறாா்களா? எனவும் போலீஸாா் கரைப்பகுதியில் இருந்து ஆய்வு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா், புதுச்சேரியில் ‘சாகா் கவச்’ ஒத்திகை: தீவிரவாதிகள் போல ஊடுருவ முயன்ற 16 போ் கைது

காரைக்குடியில் அமைச்சர் பிரபு வீடு, அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

கோட்டக்குப்பம், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை! ரூ.1.65 லட்சம் பறிமுதல்!

ஆசனூா் இந்திய எண்ணெய் கழக வளாகத்தில் பாதுகாப்பு ஒத்திகை
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



