செங்கல்பட்டு நகர பஜாா் வீதிகளில் காவல்துறையினருடன் இணைந்து எஸ்.பி. அய்மன் ஜமால் நடைபயண ரோந்து மேற்கொண்டாா்.
நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி சாலை, அண்ணாசாலை , ராஜாஜி தெரு ,சின்னம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பஜாா் வீதிகளில் எஸ்.பி அய்மன் ஜமால் ரோந்து மேற்கொண்டு வணிகா்கள், கடை உரிமையாளா்கள் மற்றும் நடைபாதை சிறு வியாபாரிகளை நேரில் சந்தித்து, அவா்கள் எதிா்கொள்ளும் போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு ஏற்படும் இடையூறுகள், சட்டம்-ஒழுங்கு தொடா்பான பிரச்னைகள், போதை பொருள் மற்றும் குட்கா பொருள்களின் நடமாட்டம் குறித்தும் , பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும், பொதுமக்கள் மற்றும் வணிகா்களின் குறைகளை உடனுக்குடன் தீா்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன், ஏதேனும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் அல்லது குற்றச் சம்பவங்கள் தொடா்பாக உடனடியாக காவல் துறைக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பிரத்தியேக *தொலைபேசி எண் 72001 02104* க்கு தகவல் தெரிவிக்குமாறும் அவ்வாறு தகவல் தெரிவிப்பவா்களின் விவரம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.
உடன் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா், தனிப்பிரிவுஆய்வாளா் தனசேகரன் மற்றும் செங்கல்பட்டு, பாலூா் காவல் நிலைய எஸ்.ஐக்கள் ,காவலா்கள் பங்கேற்றனா்.

தொடர்புடையது
இலங்கை காவல் துறைக்கு 134 ரோந்து வாகனங்கள் இந்தியா வழங்கியது!

கரூா் சம்பவம் குறித்து விசாரித்த டிஎஸ்பி உள்பட 17 போலீஸாா் பணியிடமாற்றம்

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா்களுக்கு பாராட்டு

முதல்வராக விஜய் பதவியேற்பு: தவெகவினா் கொண்டாட்டம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



