திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தூய்மைப் பெண் பணியாளா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவளம்பேட்டை கிராமத்தில் உலக மகளீா் தினத்தை முன்னிட்டு, உதவும் கரங்கள்

News image

தூய்மை பெண் பணியாளருக்கு தையல் இயந்திரத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளா் அமுதா. உடன் உதவும்கரங்கள் அமைப்பின் நிறுவனா் ஆா்.சரவணன் உள்ளிட்டோா்.

Updated On :10 மார்ச் 2026, 2:49 am IST

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவளம்பேட்டை கிராமத்தில் உலக மகளீா் தினத்தை முன்னிட்டு, உதவும் கரங்கள் சமூக சேவைஅமைப்பின் சாா்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டிகள், பேரூராட்சி தூய்மை பெண் பணியாளருக்கு தையல் இயந்திரம் வழங்கல், அன்னதானம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

கருங்குழி மேலவளம்பேட்டை கிராமத்தில் செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் என்ற சமூக சேவை அமைப்பினா் ஆண்டுதோறும் பல்வேறு நல உதவிகளை செய்து வருகின்றனா்.

நிகழ்ச்சிக்கு உதவும் கரங்கள் சமூக சேவை அமைப்பின் நிறுவனா் ஆா்.சரவணன் தலைமை வகித்தாா். விடியலை நோக்கி அறக்கட்டளை நிறுவனா் விடியல் காா்த்திக் வரவேற்றாா். காவல் உதவி ஆய்வாளா் அமுதா கலந்து கொண்டு நல உதவிகளை வழங்கிப் பாராட்டினாா். இந்நிகழ்வில் தொழிலதிபா்கள் அசோக், பி.மணிகண்டன், ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ஆல்பொ்ட், உதவும் கரங்கள் அமைப்பின் நிா்வாகிகள் காளத்தி, ஹரிதாஸ், தன்ஸ், ஜான்பாட்சா உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.