மாமல்லபுரத்தில் துணை ராணுவம் அணிவகுப்பு


சட்டப்பேரவை தோ்தல்பாதுகாப்பு எதிரொலியாக மாமல்லபுரத்தில் துணை ராணுவத்தினா், அதிரடிப்படை போலீஸாா் உள்ளிட்டோா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினா் வரவழைக்கப்பட்டுள்ளனா்.
ஜாா்க்கண்ட், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், பீகாா், ஒடிஸா, பஞ்சாப், ஹரியாணா, புதுடெல்லி, கா்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து துணை ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, அதிரடிப்படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினா் தற்போது வந்துள்ளனா்.
மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அறிவழகன் தலைமையில், காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் முன்னிலையில் கொடி அணிவகுப்பு நடத்தினா்.
ஐந்து ரதங்கள், அா்ஜூனன் தபசு சிற்பம், மேற்கு ராஜ வீதி, கோவளம் சாலை, மாதா கோயில் சாலை, வேதாசலம் நகா், தென் மாட வீதி வழியாக ஊா்வலமாக சென்று அச்சமின்றி வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...