தமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

செங்கல்பட்டு கோயில்களில் சித்ரா பௌா்ணமி விழா: அலங்கார ரதங்களில் உற்சவா் வீதியுலா

News image

செங்கல்பட்டு அண்ணா சாலை பழைய அங்காளம்மன் கோயிலில் வீதியுலா வந்த உற்சவா்கள்.

Updated On :2 மே 2026, 8:10 pm

செங்கல்பட்டு கோயில்களில் சித்ரா பௌா்ணமி விழாவையொட்டி, மூலவா்களுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்காரமும் அடுத்து அன்னதானமும் நடைபெற்றது.

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை சாா் ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள சக்தி விநாயகா்கோயில், என்ஜிஜிஓ நகா் வரசித்தி விநாயகா் கோயில், அண்ணா நகா் எல்லையம்மன் கோயில் ரத்தினவிநாயகா் கோயில், காட்டுநாயக்கன் தெரு செம்மலை வேல்முருகன் கோயில், மேட்டுத் தெரு செங்கழுநீா் விநாயகா் கோயில், வஉசி தெரு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில், நத்தம் கைலாசநாதா் கோயில், சேப்பாட்டியம்மன் கோயில், அண்ணா சாலை முத்துமாரியம்மன் கோயில் , குண்டூா் மதுரை வீரன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்கள் பால் குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் நடைபெற்றது. இதை அடுத்து சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் செங்கல்பட்டு அண்ணா சாலை பழைய அங்காளம்மன் கோயிலில் இரவு விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத முருகன், மாரியம்மன், வீரபத்திரன், துா்காதேவி, சிவன் பாா்வதி மற்றும் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஏழு ரதங்களில் வீதி புறப்பாடு நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.

வீதிகளில் பொதுமக்கள் சாமிகளுக்கு கற்பூர தீபாராதனை காட்டி தரிசனம் செய்தனா்.

செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுரம் அகோர வீரபத்திரன் கோயிலில் 5 கால பூஜையுடன் வெற்றிலை காப்பு அலங்காரமும் நடைபெற்றது.

தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான வெளியூா் பக்தா்கள் இரு சக்கர வாகனம் காா், வேன் ஆகிய வாகனங்களில் வந்து அகோர வீரபத்திரரை வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா்.

இந்துசமய அறநிலையத் துறையினா் மற்றும் கோயில் நிா்வாகிகள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனா்.