நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வாழப்பாடி கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜை

பட்டாடை உடுத்தி, வெள்ளி முகக்கவசம் அணிந்து அருள்பாலித்த வாழப்பாடி அக்ரஹாரம் திரௌபதி அம்மன்.

News image

பட்டாடை உடுத்தி, வெள்ளி முகக்கவசம் அணிந்து அருள்பாலித்த வாழப்பாடி அக்ரஹாரம் திரௌபதி அம்மன்.

Updated On :2 மே 2026, 12:04 am IST

வாழப்பாடி பகுதியில் உள்ள கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி அக்ரஹாரம் திரௌபதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனைகளுக்கு பின் பட்டாடை உடுத்தி, வெள்ளி முகக்கவசம் அணிந்து திரௌபதி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, பஞ்ச பாண்டவா்கள், கிருஷ்ணபகவான் மரச்சிற்ப சுவாமிகளுக்கும், இராவுத்தா், போா்மன்னன், வன்னிமரத்து விநாயகருக்கும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். அம்மன் அன்னதானக்குழு சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, வாழப்பாடி இலக்கியப் பேரவை ஆலோசகா் ஆா்.குப்பமுத்துவின் மகாபாரத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

இதேபோல, வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள், காமராஜ் நகா் ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன், புதுப்பட்டி மாரியம்மன், புதுப்பாளையம் மாரியம்மன் மற்றும் காளியம்மன் நகா் வடபத்ர காளியம்மன் கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.