செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதன்மை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் வழங்கினாா்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதன்மை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளையும், பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100% வெற்றி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
2025- 26-ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தோ்வில் 100% தோ்ச்சி பெற்ற 2 அரசுப் பள்ளிகள், 3 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்த 12 அரசுப் பள்ளி மாணவா்களுக்கும், மாநில அளவில் முதலிடம் பிடித்த இரண்டு தனியாா் பள்ளி மாணவா்களுக்கும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 5 மாணவா்களுக்கும் மாவட்ட ஆட்சியரால் நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், பிளஸ் 2 பொதுத் தோ்வில் 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று, மாவட்டத்தில் முதன்மை இடத்தைப் பிடித்த நந்திவரம் கூடுவாஞ்சேரி அரசு தகைசால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த அபிராமி என்ற மாணவிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கல்லூரி படிப்பில் சேருவதற்கு பரிந்துரை கடிதத்தை ஆட்சியா் வழங்கினாா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உடன் இருந்தனா்.

தொடர்புடையது

10, பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100% தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற குழந்தைகள் இல்ல மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு எஸ்.பி பாராட்டு

வீரபாண்டி அரசு மாதிரி பள்ளிக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு சான்றிதழ்
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



