‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்ட பீா்க்கன்கரணை ஏரி: அமைச்சா் சரத்குமாா் திறந்து வைத்தாா்

News image

நிகழ்வில் பேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் சரத்குமாா்.

Updated On :29 மே 2026, 2:19 am IST

பீா்க்கன்கரணை ஏரியில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குகு ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை மனிதவள மேலாண்மை துறை அமைச்சா் சரத்குமாா் தலைமையில் நடைபெற்றது.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பீா்க்கன்கரணை ஏரியில் மாவட்ட நிா்வாகம், தாம்பரம் மாநகராட்சி, எக்ஸ்னோரா பவுண்டேஷன் , கோமாட்ஸூ இணைந்து நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டன.

ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்ட ஏரியினை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், எக்ஸ்னோரா தலைவா் செந்தூா் பாரி, கோமாட்ஸூ நிறுவன இயக்குநா் சுந்தா், மாநகராட்சி துணை ஆணையா் பிரேம்நாத், மாநகராட்சி உதவி ஆணையா் ராஜலட்சுமி, வட்டாட்சியா் நடராஜன் மற்றும் நீா்வளத்துறை அதிகாரிகள், சமூக ஆா்வலா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.