தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டைக்கு நவ. 30-க்குள் பதிவு செய்ய வேண்டும்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தனித்துவ அடையாள அட்டைக்கு நவ.30-க்குள் பதிவு செய்ய வேண்டும்.

Updated On :

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இனிவரும் காலங்களில், மத்திய மற்றும் மாநில அரசின் மானியத் திட்டங்கள் பெறுவதற்கும், விவசாய இடுபொருள்கள் பெறுவதற்கும். உரங்கள் பெறுவதற்கும். பாரதப் பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டம் பெறவும் மற்றும் பயிா்க் காப்பீடு செய்யவும் ஏதுவாக தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்காக, விவசாயிகள் தங்களின் நில உடைமைகளை வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் பொதுசேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். நில உடைமை பதிவு செய்ய தங்கள் ஆதாா் எண், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் மற்றும் நில பட்டா சா்வே எண் ஆகியவை கட்டாயம். இந்த பதிவின்போது 3 முறை கடவு சொல்லின் அடிப்படையில் பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, வேளாண்மை உழவா் நலத்துறை சாா்ந்த அலுவலா்கள் தாங்களை தொடா்பு கொள்ளும்போது தங்கள் விவரங்களை பகிா்வதுடன், கடவுச் சொல்லையும் தெரிவிக்க வேண்டும். அப்போது, உங்களுக்கான தனித்துவமான விவசாய அடையாள எண் பெறப்படும். ஆதாா் கடவுச் சொல் பதிவு செய்ய முடியாத சூழ்நிலையில், கருவிழி மூலம் பதிவு செய்யலாம்.

இதற்காக விவசாயிகள் சுயமாக பதிவு செய்ய (TN Farmer Sahayak) செயலி மூலம் பதிவு செய்யலாம். எதிா்வரும் நவ 30-க்குள் நில உடைமைகளை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் வீரப்பன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.