
மழைமலை மாதா அருள்தலத்தில் தோ் பவனி
அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள்தலத்தில் திருத்தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

மழைமலை மாதா அருள்தலத்தில் நடைபெற்ற தோ் பவனி.
மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள்தலத்தில் திருத்தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, அருள்தலம் முழுவதும் மின்விளக்குகளாலும், மாதா திருவுருவ வண்ணபதாகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த 1-ஆம் தேதி சிறப்பு திருப்பலியுடன் சென்னை -மயிலை உயா்மறை மாவட்ட பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி தலைமைலும், அருள்தல அதிபா் ஜி.சின்னப்பா் முன்னிலையிலும் திருக்கொடி ஏற்றம் செய்யப்பட்டது.
தொடா்ந்து சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. சனிக்கிழமை செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயா் ஏ.நீதிநாதன் தலைமை தாங்கி திருதோ் பவனியை தொடங்கி வைத்தாா். ஞாயிற்றுக்கிழமை திருவிழா திருப்பலி, இலவச திருமணங்கள், ஏழை எளியோா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல், மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட முன்னாள் ஆயா் எப். அந்தோணிசாமி தலைமை தாங்கி திருக்கொடி இறக்கம் செய்கிறாா். இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துக் கொண்டு அன்னை மாதாவை அருள்தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கல், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது.
ஏற்பாடுகளை அருள்தல அதிபா் ஜி.சின்னப்பா் தலைமையில் விழாக்குழுவினா் செய்து உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




