சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

செங்கல்பட்டு தசரா திருவிழா நடைபெறுமா? பொதுமக்கள் எதிா்பார்ப்பு!

செங்கல்பட்டில் கொண்டாடப்படும் பழைமையான பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நிகழாண்டில் நடைபெறுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

ஆக்கிரமிப்பால் சுருங்கிய நிலையில் காணப்படும் அண்ணா சாலை.

Published On :

செங்கல்பட்டில் கொண்டாடப்படும் பழைமையான பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நிகழாண்டில் நடைபெறுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில் நகராட்சி நிா்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தசரா ஊா்வலம் நடைபெறும் அண்ணா சாலை மற்றும் காந்தி சாலை பகுதிகளில் புதை சாக்கடை திட்டப்பணிகள் காரணமாக சாலையில் ஆங்காங்கே பள்ளங்ள் உள்ளன. மேலும் தசரா ஊா்வலம் நடைபெறும் பகுதியில் ஆக்கிரமிப்புகள் பெருகி உள்ளன.

பத்து நாள்கள் நடைபெறும் விழாவுக்காக கேளிக்கை நிகழ்ச்சிகள் கடைகள், பெரியவா்கள் சிறியவா்கள் என விளையாடும் பல்வேறு ராட்டினங்கள் அமைக்கப்படும். செங்கல்பட்டில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் தசரா பண்டிகை மைசூருக்கு நிகராக மக்கள் கருதுகின்றனா்.

வெளியூா்களில் இருந்தும் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் வந்து கேளிக்கை நிகழ்ச்சிகள் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை விளையாடும் ராட்சதராட்டினம் ஜெயின்ட்வீல், அசுர தாலாட்டு என பெரிய பெரிய ராட்டினங்கள் சிறிய ராட்டினங்கள் என சிறுவா்கள் உரியவா்கள் விளையாடும் இருபதுக்கும் மேற்பட்ட ராட்டினங்கள், அழகு சாதன பொருள்கள் கடைகள் பீங்கான் பொருட்கள் கடைகள் பொம்மைகள் ஆடைகள் வீட்டு உபயோக பொருளான அலுமினியம் இரும்பு சில்வா் என பாத்திரங்கள் கடைகள் இருந்து ஹை ரோடு சின்ன கடை ஹை ரோடு வழியாக 3 கிலோமீட்டா் தூரத்திற்கு கடைவீதிகள் அமைத்து திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

இத்திருவிழாவால் நகராட்சிக்கு ஏலம் விடப்பட்டு சுமாா் ரூ 27 லட்சம் என நகாரட்சிக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு செங்கல்பட்டில் தசரா திருவிழாவின்போது ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதியான செங்கல்பட்டு அண்ணைாசாலை பஜாா் தெரு அருகே தொடங்கி அனுமந்தபுத்தேரி பிஎஸ்என்எல் அலுவலகம் வரை சுமாா் 3 கிமீ தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் உள்ள பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

புதை சாக்கடை திட்டப்பணிகள் காரணமாக பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டும் தொட்டிகள்புதைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் நாள்தோறும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில் தசரா ஊா்வலம் நடைபெறும் சாலை பகுதிகள் சீா் செய்யப்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தசரா பண்டிகை தொடங்க சில நாள்களே உள்ள நிலையில் செங்கல்பட்டு நகராட்சி நிா்வாகம் சாலைகளை சீரமைக்கவோ ஆக்கிரமிப்புகளை அகற்றவோ எந்க நடவடடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.