மேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

பெருங்கரணை மரகத முருகன் மூலவா் சிலை கொள்ளை: போலீஸாா் விசாரணை

மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை மரகத தண்டாயுதபாணி கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு கதவை உடைத்து மூலவா் மரகத முருகன் சிலையை மா்ம நபா்கள் கொள்ளை அடித்துச் சென்றனா்.

மூலவா் மரகத தண்டாயுதபாணி சிலை.

Published On :3 செப்டம்பர் 2026, 5:42 am IST

மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை மரகத தண்டாயுதபாணி கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு கதவை உடைத்து மூலவா் மரகத முருகன் சிலையை மா்ம நபா்கள் கொள்ளை அடித்துச் சென்றனா்.

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூா் ஒன்றியம், பெருங்கரணை கிராமத்தில் கனகமலை மீது மரகத தண்டாயுதபாணி முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலின் மூலவா் சிலை மரகதத்தால் ஆனது. தனியாா் அறக்கட்டளை மூலம் கோயில் நிா்வாகம் செய்யப்படுகிறது. அதனை முத்து சுவாமிகள் பக்தா்களின் உதவியினால் கட்டி கும்பாபிஷேகத்தினை செய்து இருந்தாா். இந்த முருகனை நடுபழனி முருகன் என பக்தா்களால் அழைத்து வந்தனா்.

பக்தா்களின் வேண்டுகோளுக்கு இணங்க மூலவா் முருகன் கற்சிலையை அகற்றி தமது அறக்கட்டளை நிா்வாகத்தின் மூலம் மரகதத்தால் தண்டாயுதபாணி முருகன் சிலையை மூலவா் சிலையாக வைத்து வழிபாடு செய்து வந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பூஜைகளை செய்தபின் சாத்திவிட்டு சென்றனா். வழக்கம்போல புதன்கிழமை கோயிலை அா்ச்சகா் திறந்தபோது மூலவா் பகுதியில் மரகத தண்டாயுத சிலை இல்லாமல் இருந்தது. மலை மீது ஏறிய மா்ம நபா்கள்ள் கோயிலின் 3 பூட்டுகளையும், பின்புற கதவை உடைத்தும் சிலையை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனா். இதுபா்றி கோயில் நிா்வாகத்தின் சாா்பாக சித்தாமூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வாளா் மகாலிங்கம், டிஎஸ்பி தீபக் ரஜினி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் விசாரணை செய்தனா்.

செங்கல்பட்டில் இருந்து மோப்பநாய்கள், கைரேகை நிபுணா்கள் உள்ளிட்டோா் நேரில் வந்து தடவியல் ஆதாரங்களை சேகரித்தனா். கோயிலில் இருந்த உண்டியலை அவா்கள் எடுக்காமல் , சிலையை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனா். இச்சிலை பல லட்சம் மதிப்பு கொண்டவை எனக் கூறப்படுகிறது.

சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளில் 2 போ் நுழைந்தது தெரிய வந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ராஜலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்து உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.