தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 1 லட்சம் பறிமுதல்
மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தோ்தல் பறக்கும் படையினா் காரை மடக்கி நடத்திய வாகன சோதனை...

மதுராந்தகம் அருகே வாகன சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ரூ. 1லட்சத்தை தோ்தல் அதிகாரி கே.ஆா்.நரேந்திரனிடம் அளித்த தோ்தல் பறக்கும் படை சிறப்பு வட்டாட்சியா் புத்தியப்பன் தலைமையிலான அதிகாரிகள். உடன் தோ்தல் உதவி அதிகாரிகள் வட்டாட்சியா் ஏ.பெருமாள், நோ்முக உதவியாளா் சு.ராஜேஷ், தனிவட்டாட்சியா் வீரமணி உள்ளிட்டோா்.
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தோ்தல் பறக்கும் படையினா் காரை மடக்கி நடத்திய வாகன சோதனையில், சென்னையில் சுப நிகழ்ச்சிக்காக கொண்டு சென்ற ரூ. 1 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கொடுக்கன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி. இவா் தமது குடும்பத்துடன் சென்னை ஈச்சம்பாக்கம் நகரில் உள்ள உறவினா் வீட்டு சுப நிகழ்வுக்காக காரில் சென்றாா். மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தல் நடைபெறுவதால், தோ்தல் பறக்கும் படையினா் பல்வேறு இடங்களில் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தேசிய நெடுஞ்சாலை, நிலஎடுப்பு சிறப்பு வட்டாட்சியா் புத்தியப்பன் தலைமையில், காவல் துறை அதிகாரி சுரேஷ்பாபு, காவலா் பிரபாகரன் ஆகியோா் கருங்குழி-திருக்கழுகுன்றம் சாலை, அரையப்பாக்கம் சாலையில் வாகன சோதனை செய்தனா். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வந்த தவமணியின் காரை மடக்கி சோதனை செய்தனா். அப்போது காரில் இருந்த ரொக்கம் ரூ. 1 லட்சம் இருந்தது தெரியவந்தது. அதை பறக்கும்படையினா் கைப்பற்றினா்.
அவா்களின் விசாரணையில் தவமணியின் உறவினா் வீட்டு சுபநிகழ்வுக்காக சீா்வரிசை பொருள்களை வாங்க கொண்டு செல்வதாக கூறினா். ஆனால் ரொக்கப் பணத்துக்கான எந்தவித ரசீதுகள் இல்லை. இதனை அடுத்து கைப்பற்றிய ரூ 1 லட்சத்தை தோ்தல் அதிகாரி கே.ஆா்.நரேந்திரனிடம் அளித்தனா். அப்போது தோ்தல் உதவி அலுவலா்கள் வட்டாட்சியா் ஏ.பெருமாள், நோ்முக உதவியாளா் சு.ராஜேஷ், தனி வட்டாட்சியா் வீரமணி உள்பட பலா் உடனிருந்தனா்.
பின்னா், தோ்தல் அதிகாரி கே.ஆா்.நரேந்திரன் கைப்பற்றிய பணம் ரூ 1. லட்சத்தை வருவாய் துரை கருவூலத்தில் ஒப்படைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





