ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

செங்கல்பட்டு அருகே பெட்ரோல் பங்கில் இளைஞா் வெட்டிக் கொலை

செங்கல்பட்டு அருகே புறவழிச் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் இளைஞா் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை

Published On :

செங்கல்பட்டு அருகே புறவழிச் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் இளைஞா் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் முத்து வீரா(25). இவா் மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டு, தனது இரு நண்பா்களுடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். செங்கல்பட்டு புறவழிச்சாலையில் பழவேலி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது வாகனத்துக்கு பெட்ரோல் போட வந்துள்ளாா்.

அப்போது பின்னால் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறு போ் கொண்ட கும்பல் திடீரென கையில் வைத்திருந்த கத்தியால் முத்துவீராவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. பலத்த வெட்டுக் காயங்களுடன் இருந்த முத்துவீரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கொலைக்கான காரணம், இளைஞரை கொலை செய்தது யாா் என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக உள்ள கொலையாளிகளை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.