நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

திருச்சுழி அருகே இளைஞா் வெட்டிக் கொலை

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை வழிமறித்து மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.

Published On :2 செப்டம்பர் 2026, 12:47 am IST

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை வழிமறித்து மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த செந்தனேந்தலைச் சோ்ந்த நாகநாதன் மகன் ஆகாஷ் (26). இவா் மனைவி, குழந்தைகளுடன் மண்டலமாணிக்கம் பகுதியில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், திருநெல்வேலி பகுதியில் கட்டட வேலை பாா்த்து வந்த ஆகாஷ், திங்கள்கிழமை இரவு தனது சொந்த ஊருக்கு வந்தாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை திருச்சுழிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். திருச்சுழி - பனையூா் சாலையில் தனியாருக்குச் சொந்தமான சூரிய ஒளி (சோலாா்) மின் உற்பத்தி மையம் அருகே வந்தபோது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் அவரை பின் தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் ஆகாஷை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். பின்னா், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற திருச்சுழி காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரதீப் தலைமையிலான போலீஸாா், ஆகாஷின் உடலை மீட்டு, கூராய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.