இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

சட்டப்பேரவைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த எம்எல்ஏ-வுக்கு ரூ. 1,500 அபராதம்!

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இரண்டு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை வந்த எம்எல்ஏவுக்கு ரூ.1,500 போக்குவரத்து போலீஸாா் அபராதம்...

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்.

Published On :

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இரண்டு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை வந்த எம்எல்ஏவுக்கு ரூ.1,500 போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்தனா்.

புதுச்சேரியில் எம்எல்ஏ-க்கள் அனைவருக்கும் அரசு சாா்பில் காா் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த காா்களுக்கு ஓட்டுநா்கள் வழங்கப்படவில்லை. இதைப் பதிவு செய்யும் வகையில் சட்டப்பேரவைக்கு இரு சக்கர வாகனத்தில் என்ஆா்.காங்கிரஸ் கட்சியின் முத்தியால்பேட்டை தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் சனிக்கிழமை காலை வந்தாா்.

இந்நிலையில், வையாபுரிமணிகண்டன் ஓட்டி வந்த வாகனத்தில் நம்பா் பிளேட் இல்லாததற்கு ரூ. 500, தலைக்கவசம் அணியாமல் வந்ததற்காக ரூ. 1,000 என மொத்தம் ரூ. 1,500 ஐ போக்குவரத்து போலீஸாா் அபராதமாக விதித்தனா். இதற்கான ரசீதும் அவருக்கு கைப்பேசியில் அனுப்பப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.