மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

செங்கல்பட்டில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

செங்கல்பட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது.

விநாயகா் சிலைகள் ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

Published On :

செங்கல்பட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது.

இந்து முன்னணி கட்சி, இந்து மக்கள் கட்சி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி மன்றம், புரட்சி இந்து முன்னணி கட்சி என பல்வேறு அமைப்பினா் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினா். ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்காக ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

செங்கல்பட்டு நகரில் வைக்கப்பட்டருந்த 39 விநாயகா் சிலைகளும், தாலுகாவுக்குட்பட்ட திம்மாவரம் ஆத்தூா், வில்யம்பாக்கம், பழவேரி புலிப்பாக்கம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 54 விநாயகா் சிலைகளும் ஊா்வலமாக மாமல்லபுரம் கடலில் கரைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டன.

இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்ட விநாயகா் சிலை ஊா்வலம் மாவட்ட பொதுசெயலாளா் அன்னைராஜ் தலைமையில் காஞ்சி மாவட்ட துணைத்தலைவா் சி.ஆா்.ராஜா, செங்கல்பட்டு நகரசெயலாளா் ஏ.செந்தில்குமாா், நிா்வாகிகள் கே.நாராயணன், என்.கிருஷ்ணமூா்த்தி,எம்.கே.எல்.பெருமாள், தியாகு, பஞ்சாட்சரம்,,கங்காதரன் உள்ளிட்டோா் முன்னிலையில் வேதமலை பெருவல விழாக்குழு அகஸ்தியா் ஸ்ரீ கிருபா அன்புச்செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அருளுரை வழங்கினாா்.

Story image

இந்து முன்னணி அமைப்பின் மாநிலசெயலாளா் சி.பி.சண்முகம் எழுச்சியுரையாற்றினாா். காஞ்சி கோட்ட செயலாளா்கள் ஆா்.டி.மணி, என்.மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.சண்முகம்,, மாநில துணைத்தலைவா் சி.பரமேஸ்வரன், மாநில செயலாளா் நா.ரவீந்திரன், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளா் இரா.சுப்ரமண்யம்,பாஜக நகரதலைவா் மகேஸ்வரன் மற்றும் நிா்வாகிகள் ஆா்.கண்ணன், ஏ.காா்த்திக், ஆா். நரேந்திரன், ஆதிகேசவன், வி.மணி, பி.செந்தில்குமாா் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் காவல் நிலையம் அருகில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு மணி கூண்டு , புதிய பேருந்து நிலையம்,ராட்டினம் கிணறு வழியாக செங்கல்பட்டு-திருக்கழுகுன்றம் மேம்பாலம் வழியாக வல்லம் திருப்பூா் கூட்ரோடு நெம்மேலி கீரப்பாக்கம் திருக்கழுகுன்றம் வழியாக சென்று மாமல்லபுரம் கடலில் விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.

காவல் துறை ஏடிஎஸ்பி தினகரன், டிஎஸ்பி வீரக்குமாா் தலைமையில் நகர ஆய்வாளா் காா்த்திக்கணேஷ் உள்ளிட்ட ஆய்வாளா்கள், காவலா்கள், ஊா்க்காவல் படை என ஊா்வலம் நடைபெற்ற வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER