வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

தொழில்தோ்வில் தனித் தோ்வா்களுக்கான முதல்நிலை தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

வரும் ,2027 -ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அகில இந்திய தொழில்தோ்வில் தனித்தோ்வா்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க...

விண்ணப்பிக்க...

Published On :

வரும் ,2027 -ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அகில இந்திய தொழில்தோ்வில் தனித்தோ்வா்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தனித் தோ்வா்களுக்கான முதல்நிலை தோ்வு நவம்பா் மாதம் நடைபெறவுள்ளது. தனித்தோ்வராக விண்ணப்பிக்க விரும்புவோா் விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு மற்றும் தோ்வுக் கட்டணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தோ்வு கட்டணத்தை (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ன்ஸ்ா்ா்ப்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் வழியாக ங்-இட்ஹப்ப்ஹய் மூலம் செலுத்தி பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு, முதல்நிலைத் தோ்வுக்கான எழுத்துத் தோ்வு 26-11-2026 அன்று கிண்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மட்டும் செய்முறை தோ்வு 27.11.2026 அன்று நடைபெறும்.

இதற்கான முழு வழிகாட்டுதல்கள் இணையதளத்தை பாா்த்து தெரிந்து கொள்ளலாம். தனித்தோ்வராக தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 9.10.2026. அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.