நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்டாசு, தீப்பெட்டி விலை "கிடுகிடு' உயர்வு

சென்னை, ஆக. 5:  பட்டாசு, தீப்பெட்டி ஆகியவற்றின் விலை பல மடங்கு அதிகரித்து வருகிறது. சிவகாசியில் பட்டாசு தயாரிப்பில் உள்ள பிரச்னை காரணமாக இப்போது பட்டாசு விலை ஒட்டுமொத்தமாக 30% முதல் 40% வரை அதிகரித்து

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:02 am

ச. குமரன்

சென்னை, ஆக. 5:  பட்டாசு, தீப்பெட்டி ஆகியவற்றின் விலை பல மடங்கு அதிகரித்து வருகிறது.

சிவகாசியில் பட்டாசு தயாரிப்பில் உள்ள பிரச்னை காரணமாக இப்போது பட்டாசு விலை ஒட்டுமொத்தமாக 30% முதல் 40% வரை அதிகரித்துள்ளது.

இதே போல தீப்பெட்டிகளின் விலையும் 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் 40 பைசாவுக்கு விற்கப்பட்ட தீப்பெட்டி தற்போது ரூ. 1-க்கு சில்லறை விலையில் விற்கப்படுகிறது.

ஆனால், 60 தீப்பெட்டிகள் கொண்ட சீட்டா நிறுவனத் தயாரிப்பு தீப்பெட்டி ஒரு பண்டல் ரூ. 356-ல் இருந்து ரூ. 321-க்கு விலை குறைவாக விற்கப்படுகிறது.

சென்னையில் கடைகளில் சில்லறை விலையில் தீப்பெட்டிகளின் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

பட்டாசு ஆலைகளில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்தான் மிக அதிக அளவு உற்பத்தி செய்யப்படும். ஆனால், இப்போது சிவகாசி பகுதியில் உள்ள பல்வேறு ஆலைகளில் பொட்டாசியம் குளோரைடு பற்றாக்குறை பிரச்னை காரணமாக உற்பத்தி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி பகுதியில் ஆடிக் காற்று பலமாக வீசுவதால், வெயிலில் காய வைக்கப்படும் வாண வெடிகளில் உள்ள மருந்துத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.

இதுதவிர பொட்டாசியம் குளோரைடு தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில் இதர மூலப் பொருள்களின் அளவு அதிகரிக்கப்பட்டு வெடிபொருள் கலவை தயாரிக்கப்படுவதும் விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.

எனவே சிவகாசி பகுதியில் தொடரும் விபத்துகளால் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி எதிர்பாராத வகையில் சரிவைச் சந்தித்து வருகிறது.

நவராத்திரி, தீபாவளி பண்டிகை சீசனை முன்னிட்டு, பட்டாசு வியாபாரிகள் பெருமளவு பட்டாசு ரகங்களைக் கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

வியாபாரிகள் முன்பணம் செலுத்தினால் மட்டுமே...ஆனால், மொத்த விற்பனையாளர்களிடம் "ஆர்டர்' பெறும் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் மொத்த கொள்முதல் மதிப்பில் 30 முதல் 40 சதவீதம் தொகையை முன்பணமாகச் செலுத்துமாறு வலியுறுத்துகின்றன.

பேரளவு நிறுவனங்கள் முதல் சிறிய ஆலைகள் வரை இதே நிலை தொடர்கிறது. இதனால், பட்டாசு கொள்முதல் செய்ய பல லட்சம் ரூபாயை முன்பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு மொத்த வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதில் அதிக அளவு முதலீடு செய்யும் வியாபாரிகள் மட்டுமே பட்டாசுகளை விற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தீபாவளிக்கு 2 மாதங்களுக்கு முன்னரே பட்டாசு விலை 30 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது மேலும், மேலும் உயரக் கூடும்.

சென்னையில் பட்டாசு விற்பனை...நாட்டிலேயே மிக அதிக அளவு பட்டாசு கொள்முதல் செய்யப்படும் இடமாக சென்னை உள்ளது. சென்னையில் மட்டும் ஆண்டுதோறும் ரூ. 40 கோடி முதல் ரூ. 60 கோடி வரை பட்டாசு கொள்முதல் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கத்தின் செயலர் கே. அப்பாஸ் புதன்கிழமை கூறியதாவது:

சென்னையில் பாரிமுனை, தங்கசாலை, புரசைவாக்கம், தியாகராயநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 90-க்கும் மேற்பட்ட பட்டாசு வியாபாரிகள் உள்ளனர்.

இந்த ஆண்டு அதிகத் தொகை செலுத்தினால் மட்டுமே பட்டாசுகள் விநியோகிக்கப்படும் என உற்பத்தியாளர்கள் கண்டிப்பாக தெரிவித்து விட்டனர்.

கொள்முதல் செய்வதில் 30 சதவீதம் தொகையை முன்பணமாக செலுத்தி வருகிறோம். இனிமேல் தான் பட்டாசுகள் விற்பனைக்கு வந்து சேரும்.

தீபாவளி சீசன் தொடங்கும்போது பட்டாசு விலை மேலும் உயரும். இதைத் தவிர்க்க இயலாத நிலை உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.