புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கல்விக் கடன் கிடைக்காததால் தவிக்கும் பார்வையற்ற மாணவர்

சென்னை, ஜூலை 26:  தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் கல்வி பயில இடம் கிடைத்தும், வங்கிகள் கல்விக் கடனுதவி அளிக்க முன்வராததால் பார்வையற்ற மாணவர் ஏ. சையது அன்சாரி தவிக்கும் நிலையில் உள்ளார்.   விருதுநகர் மாவட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:01 pm

ச. குமரன்

சென்னை, ஜூலை 26:  தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் கல்வி பயில இடம் கிடைத்தும், வங்கிகள் கல்விக் கடனுதவி அளிக்க முன்வராததால் பார்வையற்ற மாணவர் ஏ. சையது அன்சாரி தவிக்கும் நிலையில் உள்ளார்.

  விருதுநகர் மாவட்டம் வீரசோழம் அருகில் உள்ள ஆண்டியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் அலி. ஹோட்டலில் "சர்வராக' பணியாற்றுகிறார். இவரது மனைவி பாத்திமா பீவி. இத் தம்பதியின் ஒரே மகன் சையது அன்சாரி.

  பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் பிளஸ் டூ படித்து, 1200-க்கு 870 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். பள்ளியில் 3-ம் இடம் பெற்றார்.

  கம்ப்யூட்டர் கல்வியிலும் பட்டயம் பெற்ற இவர் தடகளம், விநாடி-வினா, பேச்சுப் போட்டிகளிலும் வென்று, சான்றிதழ் பெற்றுள்ளார்.

  மகனின் கல்வி ஆர்வத்தை அறிந்த இவரது பெற்றோர், ஆவடி அருகே பெரியார் நகருக்கு குடிபெயர்ந்தனர்.

  நீதிபதியே முன்மாதிரி...இவர் பயின்ற பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியின் முன்னாள் மாணவர் டி.டி. சக்கரவர்த்தி, சட்டக் கல்வியில் பட்டம் பெற்று, அண்மையில் கோவை மாவட்டத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

  இதையடுத்து, அவரைப் போலவே தானும் சட்டம் பயின்று நீதிபதியாக வேண்டும் என்பதே சையது அன்சாரியின் லட்சியமாக மாறியது.

  மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு, சென்னையில் உள்ள "காலேஜ் ஃபைண்டர் டாட் காம்' நிறுவனம் வழிகாட்டியது.

  டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்திய அகில இந்திய அளவிலான பொது சட்ட மாணவர் சேர்க்கைக்கான (கிளாட்) தேர்வில் பங்கேற்று, "பிரெய்லி முறையில்' தேர்வு எழுதி, சிறப்பிடத்துடன் தேர்ச்சி பெற்றார் அன்சாரி.

  இதன் மூலம் கொச்சியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில், பி.ஏ. எல்.எல்.பி. எனும் 5 ஆண்டு பட்டப் படிப்பில் சேர இவருக்கு இடம் கிடைத்தது.

  இதற்கான கல்விக் கட்டணமாக மட்டும் ரூ. 47,000 செலுத்த வேண்டும்.

  இதையடுத்து கல்விக் கடனுதவி பெற ஆவடியில் உள்ள இந்தியன் வங்கி கிளை உள்ளிட்ட பல்வேறு வங்கிகளுக்குப் படையெடுத்தும் இவருக்கு ஏமாற்றமே எஞ்சியது.

  சட்டக் கல்வி பயில வங்கிக் கடனுதவி தர விதிகள் இடம் அளிக்கவில்லை என்பதே வங்கி அதிகாரிகளின் பதிலாக இருந்தது.

  இதனால் துவண்டு கிடந்த இவருக்கு, சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த "அனிஷா' தொண்டு நிறுவனம் உதவிக் கரம் நீட்டியது. இப்போது, கொச்சி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார் அன்சாரி. தமிழகத்தை சேர்ந்த பார்வையற்ற மாணவரான இவர், தேசிய பல்கலைக்கழகத்தில் சேரும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

  தங்கும் இடம், உணவு ஆகியவை உள்பட பல்வேறு செலவுகளை எதிர் நோக்கியுள்ள இவருக்கு, வரும் ஆண்டுகளுக்காவது கல்விக் கடன் வழங்க, வங்கிகள் கருணைக்கரம் நீட்டுமா?

  இவரை தொடர்பு கொள்ள, செல்பேசி எண்கள்- 9884138072, 9281305116.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.