அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அடிப்படை வசதிக்கு ஏங்கும் கிளிக்கோடி கிராமம்

பொன்னேரி, டிச.  7:    மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள கிளிக்கோடி கிராமத்தில் உள்ள காலனியில் வசிக்கும் மக்கள் கழிப்பிடம், சாலை, சுடுகாடு மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:27 pm

எம்.சுந்தரமூா்த்தி

பொன்னேரி, டிச.  7:    மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள கிளிக்கோடி கிராமத்தில் உள்ள காலனியில் வசிக்கும் மக்கள் கழிப்பிடம், சாலை, சுடுகாடு மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள கடைக்கோடி பகுதியாக விளங்கும் கிளிக்கோடி கிராமத்தில் உள்ள காலனியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகள் மற்றும் ஓடு, ஓலை வேய்ந்த வீடுகளில் ஏழ்மை நிலையில் இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான சாலை, கழிப்பிடம், தெரு விளக்கு சுடுகாடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இங்கு 2003-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு உறுப்பினர் நிதியின்கீழ் கட்டப்பட்டுள்ள கழிப்பிடம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கின்றது. பொதுக் கழிப்பிடம் இல்லாததன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளின் அருகிலேயே காலை கடன்களை கழிக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி தொற்று நோய்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது.

மேலும் இங்குள்ள சுடுகாட்டுக்கு இதுவரை மேற்கூரை அமைக்கப்படாததன் காரணமாக மழை நேரங்களில் உயிரிழப்பவர்களை எரியூட்ட முடியாமல் மழை நிற்கும் வரை பிணத்துடன் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. அத்துடன் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் எரியாமல் காட்சி பொருளாய் இருக்கிறது. மேலும் முறையான சாலை, மின்விளக்கு வசதி இன்றி இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கழிப்பிடம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தர திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.