புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அதிரடி கட்டண வசூலில் திருமண மண்டபங்கள்!

சென்னை, மார்ச்  16:  அதிரடி கட்டண வசூலில் தனியார் திருமண மண்டபங்கள் ஈடுபட்டுள்ளதால், திருமண வீட்டார் அதிர்ச்சியில் செய்வதறியாது தவிக்கின்றனர். ÷சென்னையில் நட்சத்திர ஹோட்டல்கள், சமுதாய அமைப்புகள் மற்று

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:29 pm

ச. குமரன்

சென்னை, மார்ச்  16:  அதிரடி கட்டண வசூலில் தனியார் திருமண மண்டபங்கள் ஈடுபட்டுள்ளதால், திருமண வீட்டார் அதிர்ச்சியில் செய்வதறியாது தவிக்கின்றனர்.

÷சென்னையில் நட்சத்திர ஹோட்டல்கள், சமுதாய அமைப்புகள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான 350}க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன.

÷திருக்கோயில் தேவஸ்தானங்கள் மற்றும் பங்குப் பேரவைகள் சார்பாகவும் திருமண மண்டபங்கள் இயங்கி வருகின்றன.

÷இவை தவிர மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள 48 சமுதாய நலக் கூடங்களும், ஆண்டுதோறும் டெண்டர் அல்லது ஏலம் மூலம் ஒப்பந்ததாரர் தேர்வு செய்து ஒப்படைக்கப்பட்டு, திருமண மண்டபங்களாக நடத்தப்படுகின்றன.

÷இதில் தனியார் திருமண மண்டபங்கள் 3 வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. "குளுகுளு' வசதி செய்யப்பட்ட, முதல் வகுப்பு திருமண மண்டபங்களுக்கு (750 பேர் அமரும் வசதி) ஒரு நாளுக்கு ரூ. 1.50 லட்சத்தில் இருந்து ரூ. 1.75 லட்சமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

÷குளுகுளு வசதி இல்லாத "பி' வகுப்பு திருமண மண்டபங்களுக்கு (400 பேர் அமரும் வசதி) ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை கட்டணமாக பெறப்படுகிறது.

"சி' வகுப்பு திருமண மண்டபங்களுக்கு ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரை கட்டணமாக பெறப்படுகிறது.

கட்டணம்..கட்டணம்...: இதில் பிவிசி நாற்காலிகள், குடிநீர் வசதி, மணமேடை அலங்காரம் உள்ளிட்டவையும் அடங்கும். பெரும்பாலான திருமண மண்டபங்களில் மின் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ. 9 முதல் ரூ. 11 வரை பெறப்படுகிறது. சுத்தம் செய்ய பராமரிப்புக் கட்டணமும் தனியாக வசூலிக்கப்படுகிறது.

÷சில தனியார் திருமண மண்டபங்களில் முகூர்த்த நாள்களில் 12 மணி நேரத்துக்கும், 8 மணி நேரத்துக்கும் என தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

÷இந்தக் கட்டணத்தில் 60 சதவீதம் வரை முன்பணமாக பல நாள்களுக்கு முன்னரே வசூலிக்கப்படுகிறது. குடிநீர் லாரி கட்டணம், சாப்பாடு சேவை (கேட்டரிங்) கட்டணம், மின் அலங்காரம், பந்தல்}சாமியானா அலங்காரம், மணமக்கள் சிம்மாசனம் என அதிகரிக்கும் தேவைகளுக்கு ஏற்பத் தனித்தனியே கட்டணம் பெறப்படுகிறது.

திருமண மண்டபங்களாக மாறும் திரையரங்குகள்:  திருமண மண்டபங்களை நடத்துவது, நூறு சதவீதத்துக்கும் மேல் லாபகரமான தொழிலாக மாறிவிட்டது. இதனால், மயிலாப்பூர் காமதேணு, கோடம்பாக்கம் ராம் உள்ளிட்ட புகழ் பெற்ற திரையரங்குகள் பல சப்தமின்றி திருமண மண்டபங்களாக மாற்றப்பட்டுள்ளன.

÷திருமண மண்டப உரிமையாளர்களிடம் இருந்து ஆண்டுதோறும் சொத்து வரி மட்டுமே மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்தத் திருமண மண்டபங்களில் இருந்து அதிக அளவு திடக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் தான் ஈடுபடுகின்றனர்.

÷இதேபோல கழிவு நீர் அகற்றம் மற்றும் தண்ணீர் விநியோகத்திலும் குடிநீர் வாரியம் முக்கிய சேவையை அளிக்கிறது.

மறக்கப்பட்ட "கன்சர்வன்சி' கட்டணம்:  தமிழகத்தில் தனியார் திருமண மண்டபங்களுக்கு "கன்சர்வன்சி' (தூய்மைப் பராமரிப்பு) கட்டணம் ஏதும் விதிக்கப்படுவது இல்லை.

÷ஆனால், இதற்கு மாறாக திருமண வீட்டாரிடம் இருந்து "கன்சர்வன்சி' கட்டணம், கிளீனிங் கட்டணம் ஆகியவற்றை திருமண மண்டபங்கள் அதிக அளவு வசூலிக்கின்றனர்.

÷திருமண மண்டபங்களுக்கு இக் கட்டணத்தை, பல ஆண்டுகளுக்கு முன்பு திடக்கழிவு மேலாண்மைத் துறை விதித்தது. இப்போது இது மறக்கப்பட்டுள்ளது.

÷எனவே, ஒவ்வொரு திருமண நிகழ்ச்சிக்கும், குறிப்பிட்ட தொகையை "கன்சர்வன்சி' கட்டணமாக திருமண மண்டபங்களுக்கு விதிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதே போல பொதுமக்களின் நலன் கருதி திருமண மண்டபங்களுக்கான கட்டணத்தையும் முறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.