புத்தக வெளியீடுகளில் சிறந்த நூல்களை வெளியிடுவதில் ஸ்ரீசெண்பகா பதிப்பகம் முன்னணி வகிக்கிறது. பழம்பெருமை வாய்ந்த நூல்கள், சித்த மருத்துவம், ஆன்மிகம், புரட்சியாளர், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள். சிறுவர் இலக்கியங்கள், நாவல்கள், கவிதை நூல்கள், பொது அறிவு, ஜோதிடம், அகராதிகள் மற்றும் ரூ. 10 விலையில் மலிவு நூல்கள் புத்தகப் பிரியர்களுக்கு விருந்தாக படைக்க வெளியீட்டு உள்ளனர்.
மகாகவி பாரதியாரின் கவிதைகளைக் கோத்து 664 பக்கங்களில் மிக மலிவாக ரூ. 100 விலையில் விற்பனைக்கு உள்ளது. இந்நூல் மொத்தம் 10 பகுதிகளை கொண்டு ஒரே புத்தகமாக இருக்கிறது. பாரத நாட்டுக்கு விடுதலைக்கு வித்திட்ட பாடல்கள், பாஞ்சாலி சபதம், சக்தி வணக்கம் என்ற தலைப்புகளில் பாரதி எழுதியுள்ள பாடல்கள் மிகவும் அருமை.
மேலும் மெருகூட்டும் விதமாக ஓவியக்குறள் என்னும் புத்தகம் அனைத்து அதிகாரங்களுக்கும் சிறந்த ஒவியம் ஒன்றினை இணைத்து குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் எளிதாக விளங்கும் வகையில் சிறப்பாக வண்ண ஓவியங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் விலை ரூ. 500. அன்பளிப்பாக வழங்க அனைத்து தகுதியும் படைத்த சிறந்த நூல்.
புத்தகப் பிரியர்களின் விருப்பத்திற்கிணங்க, மேலும் சிறப்பான புத்தகங்களை வெளியிட ஸ்ரீசெண்பகா பதிப்பகத்தார் திட்டமிட்டு வருகின்றனர்.