நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சென்னை புறநகர்க் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை

தாம்பரம், ஜூலை 1: சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். த

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:26 pm

மனோ பாரதி

தாம்பரம், ஜூலை 1: சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்து, உயர்கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம் அளவில் தான் உள்ளது. அந்த எண்ணிக்கையை 15 சதவிகிதமாக உயர்த்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை வலியுறுத்தி வருகிறது.

ஆண்டுதோறும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் இருந்தாலும், உயர்கல்விக்கான கட்டணம் செலுத்தமுடியாமல், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி விடும் அவலம் உள்ளது.

பொறியியல் பட்டப் படிப்புக்காக லட்சக்கணக்கிலும்,பட்டப்படிப்புக்காக ஆயிரக்கணக்கிலும் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி, கடன் வாங்கி கல்லூரிகளில் சேர்க்கின்றனர்.

ஆனால் பெரும்பாலான அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிலை அதிர்ச்சி அளிக்கத்தக்க வகையில், மாணவர்களுக்கு முழுமையான கல்வி வழங்கத் தகுதியற்ற நிலையில் உள்ளன.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மிகக் குறைவான கல்விக் கட்டணம் பெறப்படுகிறது என்றாலும், அங்கு பணி புரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை சுயநிதிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்துடன் ஒப்பிட்டால் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

சென்னை புறநகர்ப் பகுதிகளில் 6 அரசு உதவி பெறும் கல்லூரிகளும்,5 சுயநிதி உதவியுடன் இயங்கும் கல்லூரிகளும் உள்ளன. அரசு உதவி பெறும் அனைத்துக் கல்லூரிகளிலும் சராசரியாக 16 முதல் 20 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சுயநிதி உதவிக் கல்லூரிகளில் இந்தப் பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை.

போதிய ஆசிரியர்கள் இல்லாமல் கல்லூரி இயங்கி வருகிறது என்ற உண்மையை அக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் எளிதில் அறிந்து கொள்ள முடியாத வகையில் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளின் நிர்வாகம், தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் பற்றாக்குறைப் பிரச்னையைத் திறமையுடன் கையாண்டு வருகின்றன.

அரசு உதவி பெறும் சில கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தங்கள் கல்லூரியின் ஆசிரியர்கள் பற்றாக்குறையைப் புரிந்து கொண்டு, ஒதுக்கப்பட்ட நேரத்திற்கும் கூடுதலாக பாடம் நடத்தி உதவி வருவதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கல்லூரி ஆசிரியர்கள் பற்றாக்குறை பற்றி பெயர் சொல்ல விரும்பாத ஒரு கல்லூரி முதல்வர் தயங்கியபடி கூறியதாவது:

""ஆசிரியர்கள் பற்றாக்குறைப் பிரச்னை சென்னை புறநகர்ப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் மட்டுமல்ல, தமிழகமெங்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் இதே நிலை தான் பல ஆண்டுகளாக நிலவி வருகின்றது. இந்த விஷயம் இதற்கு முன் ஆண்டவர்களுக்கும், இப்போது ஆள்கின்றவர்களுக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மிக மிக நன்றாகவே தெரியும். அரசு தொடர்புள்ள எந்தத் துறையில் ஆள் பற்றாக்குறை இல்லாமல் இருக்கின்றன.

அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பது போல கல்வித் துறையிலும் பற்றாக்குறை உள்ளது.

இதை பெரிதுபடுத்தாமல் பற்றாக்குறையை எப்படியும் சமாளிக்க வேண்டும். சமாளித்துப் பழகிக் கொள்ள வேண்டும் என்பது அரசிடம் என்றும் உதவியை எதிர்நோக்கும் எங்களுக்கு ஏற்கெனவே உணர்த்தப்பட்டுள்ளது'' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.