மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மார்கழி வழிபாடு: ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை: பாசுரம் - 27

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா! உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே, பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை யுடுப்போம் அத

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:36 pm

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா! உன்றன்னைப்

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே,

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்

கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

விளக்கம்: கோபியர்கள் கண்ணனை, "கோவிந்தா!' என்றழைத்து, உன்னைப் பாடிப் பறை கொண்டபிறகு, எங்களுக்கு ஒரு சன்மானம் அளிக்க வேண்டும்; நாங்கள் மேற்கொண்ட நோன்பு வெற்றிகரமாக முடிந்ததற்காக நாடு புகமும் பரிசு அளிக்க வேண்டும். சூடகம், தோள்வளை, தோடு, காதில் அணியும் செவிப்பூ, காலில் அணியும் பாடகம் முதலிய பல ஆபரணங்களைக் கொடுக்க வேண்டும். ஆடைகள் கொடுக்க வேண்டும்; நல்ல நெய் சேர்க்கப்பட்ட பால்சோற்றை முழங்கையில் வழியும்படியாக நாங்கள் எல்லோரும் சேர்ந்து உண்ணவேண்டும். வாய் உன்னைப் பாடவேண்டும்; உடம்பு உன்னோடு கூடவேண்டும். இந்தப் பாசுரம் திருவேங்கடத்தை உணர்த்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.