சென்னை புறநகரில் மின் மீட்டர்கள் பற்றாக்குறை
தாம்பரம்: சென்னை புறநகர்ப் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு முனை மற்றும் மும்முனை மின் இணைப்பு மீட்டர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரும் அவ


தாம்பரம்: சென்னை புறநகர்ப் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு முனை மற்றும் மும்முனை மின் இணைப்பு மீட்டர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வளர்ந்து வரும சென்னை புறநகர்ப் பகுதிகளில் தினமும் ஏராளமான புதிய குடியிருப்புகளும், வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன. இன்றைய சூழலில் மின்வசதி இல்லாமல் வீடுகள் கட்ட இயலாதது. எனவே, வேறு வழியின்றி அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்து சட்ட விரோதமாக மின் இணைப்பு பெற்று கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் புதிதாக வீடு கட்டுவதற்கு முறைப்படி மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும்போது மின் மீட்டர்கள் இருப்பு இல்லாததால் மின் இணைப்பு பெற முடிவதில்லை. ஏற்கெனவே கட்டி முடித்த வீடுகளுக்கே மின் மீட்டர் பற்றாக்குறை காரணமாக மின் இணைப்பு வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மின்வாரியம் வருவாயைத் தொடர்ந்து இழந்து வருகிறது.
மின் மீட்டர் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு காண அரசு அண்மையில் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் தயாரிக்கும் ஒருமுனை, மும்முனை, மின் மீட்டர்களை வாங்கி மின்வாரிய அலுவலகத்தில் கொடுத்து உடனடியாக மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தலின்படி குரோம்பேட்டை, தாம்பரம், செம்பாக்கம் உள்ளிட்ட பல மின் அலுவலகங்களில் புதிய மின் மீட்டர்களை பலர் வாங்கிக் கொடுத்த பிறகும் மின்இணைப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்கள் மின் மீட்டர் வாங்கிக் கொடுத்தாலும் அதை உடனே பொருத்தி மின் இணைப்பு வழங்கிவிட முடியாது. அவற்றை சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள மீட்டர் மின்னோட்ட சோதனை அலுவலகங்களுக்கு எடுத்துச் சென்று பரிசோதித்து சீல் வைத்து எடுத்து வந்த பிறகே பொருத்த முடியும்.
ஒருமுனை மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெளிச்சந்தையில் புதிய மின் மீட்டரை தாங்களே வாங்கித் தருவதால் முன்வைப்புத் தொகை என்ற பெயரில் ரூ. 700 பெறுவதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி உரிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
மேலும் தற்போது குறிப்பிட்ட சில நிறுவனங்கள் தயாரிக்கும் தரமான மின் மீட்டர்களை தான் பொதுமக்கள் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால் சந்தையில் தட்டுப்பாடு உருவாகி உள்ளது. நிலைமை வெகுவிரைவில் சீராகும். மேலும் தரமான ஒருமுனை, மும்முனை மின் மீட்டர்கள் தயாரிக்கும் வேறு சில நிறுவனங்களையும் பரிந்துரைக்கும் திட்டமும் உள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...