/

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் மாநகர பஸ் விபத்துகள்

விபத்துகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறிவந்தபோதும், சென்னையில் மாநகர பஸ்களால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

News image
Updated On :6 அக்டோபர் 2012, 8:51 pm

விபத்துகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறிவந்தபோதும், சென்னையில் மாநகர பஸ்களால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 25 பணிமனைகள் மூலம் மொத்தம் 3400 பஸ்கள் பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களால் அவ்வப்போது விபத்துகளும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகின்றன.

நெரிசல் மிகுந்த சென்னை மாநகரில் அதிவேகமாக பஸ்ûஸ இயக்குவது, சிவப்பு விளக்கு எரியும்போதும் போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் செல்வது, பின்தொடர்ந்து வரும் பிற வாகனங்கள் செல்லமுடியாத வகையில் நிறுத்தத்தில் பஸ்ûஸ நிறுத்துவது உள்ளிட்ட விதி மீறல்களே இதுபோன்ற தொடர் விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

அதே நேரம், பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாததும் விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் என பஸ் டிரைவர்கள் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பணிமனையிலிருந்து பஸ்ûஸ எடுக்கும்போது, பிரேக் உள்ளிட்ட அடிப்படை சோதனைகளை ஓட்டுநர் மேற்கொள்வது கடைமை என்றபோதும், பிரேக் கட்டையின் போல்ட்-நட் சரிவர போடப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட சோதனைகளைச் செய்ய வேண்டியது பணிமனை தொழில்நுட்ப ஊழியரின் கடமையாகும். இந்த ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக பஸ்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என்கின்றனர் டிரைவர்கள்.

மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஏர் பிரேக் வசதி கொண்ட பஸ்களில் ஓராண்டுக்குப் பிறகு தானியங்கி பிரேக் லாக் சிஸ்டத்தை போக்குவரத்துக் கழகம் செயலிழக்கச் செய்துவிடுகிறது. ஏர் சிலிண்டரில் காற்றழுத்தம் குறைந்தால் பஸ்ûஸ இயக்கவே முடியாது என்பதால், இதுபோன்ற நடவடிக்கையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் இறங்குகிறது. இதுபோன்ற முறையற்ற நடைமுறைகள்தான் விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்கின்றனர் டிரைவர்கள்.

இந்த நிலையில், விபத்துகளைத் தடுக்க டிரைவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி, யோகா பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டபோதும், விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.

இதுபோன்று தொடர் விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இனியும் அலட்சியம் காட்டாமல் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அதிகாரிகள் பணிமனைகளிலும், பஸ் நிலையங்களிலும் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொள்வது, ஊழியர்களுக்கு புத்துணர்வுப் பயிற்சிகளை தொடர்ந்து வழங்குவது, ஓட்டுநர்களை தொடர்ந்து பஸ்ûஸ இயக்க அனுமதிக்காமல் அவர்களுக்கான ஓய்வை சரிவர வழங்குவது, டிரைவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான பொறுப்பை அதிகரிக்கச் செய்வது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிறார் ஓய்வு பெற்ற மாநகரப் போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி.

9 மாதங்களில் 1390 விபத்துகள்

2010: மாநகர பஸ்களால் 1200-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்துகள் 132. படு காயங்களை ஏற்படுத்திய விபத்துகள் 88.

2011: மாநகர பஸ்களால் 1200-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்துகள் 122. படுகாயம் ஏற்படுத்திய விபத்துகள் 146.

2012: இந்த ஆண்டு

9 மாதங்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் 1390 விபத்துகள் மாநகர பஸ்களால் நிகழ்ந்துள்ளன. இதில் உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்துகள் 90. இந்த ஆண்டு முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், மாநகர பஸ்களால் இன்னும் எத்தனை விபத்துகள் ஏற்படப் போகிறதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.