சென்னை மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் அடுத்த மாதம் கோயம்பேடு பணிமனையில் மேற்கொள்ளப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலில் தயாரிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயிலின் 4 பெட்டிகள் கப்பல் மூலம் மே 31-ஆம் தேதி சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தன. துறைமுகத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் பணிமனைகளுக்கு ராட்சத டிரெய்லர் லாரிகள் மூலம் புதன்கிழமை நள்ளிரவு கொண்டு செல்லப்பட்டன.
அந்த நேரத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சுமார் 2 மணி நேர பயணத்துக்குப் பிறகு மெட்ரோ ரயில் பெட்டிகள் கோயம்பேடு சென்றடைந்தன.
பணிமனையில் ரயில்: துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் பெட்டிகள் கோயம்பேடு பணிமனையில் வியாழக்கிழமை இறக்கி வைக்கப்பட்டன.
இந்தப் பெட்டிகள் தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக 2 மெட்ரோ ரயில்கள் (8 பெட்டிகள்) அடுத்த மாதம் கப்பலில் சென்னை வந்தடைகின்றன.
இந்த ஆண்டு இறுதிக்குள் 9 ரயில்களும் பிரேசிலில் இருந்து வந்து சேரும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனை ஓட்டம்: சென்னை மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் கோயம்பேடு பணிமனையில் முதல் கட்டமாக மேற்கொள்ளப்படும். இதற்காக தண்டவாளங்கள் அமைக்கும் பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.
இந்தப் பணிகள் ஜூலை 15-ஆம் தேதியளவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பணிமனையில் மின் பணிகள் அனைத்தும் முடிக்கப்படவுள்ளது. இந்த மின் பணிகள் முடிந்தால் மட்டுமே கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டத்தை நடத்த முடியும். அதுவரை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பெட்டிகள், பாதுகாப்பு கருதி மூடி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூண்கள் இல்லாத மேம்பாலம்
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் அமையவுள்ள மெட்ரோ ரயில் மேம்பாலம் 75 மீட்டர் தொலைவுக்கு தூண்கள் இன்றி அமைக்கப்படுகிறது. கத்திப்பாரா அருகே ஜி.எஸ்.டி., 100 அடி சாலைகள் இடையே தூண்கள் இன்றி 75 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
காயம்பேடு - பரங்கிமலை இடையே சிமென்ட் தூண்கள் இடையே இடவசதிக்கு ஏற்றவாறு 31 மீட்டர் நீளம் முதல் 12 மீட்டர் நீளம் வரை தொடர் மேம்பாலம் அமைக்கப்பட்டு அதன் மீது ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பாதையில் ஆலந்தூர் ரயில் நிலையம் அருகில் ஜி.எஸ்.டி. சாலை மற்றும் கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி பாலம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், கத்திப்பாரா பாலம் - ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் இடையே தூண்கள் இன்றி "கேன்டி லீவர்' தொழில்நுட்பத்தில் 75 மீட்டர் நீளத்துக்கு தூண்கள் இன்றி மேம்பாலம் கட்டப்படுகிறது.
இதில் இரண்டு தூண்களுக்கும் இடையே 3 மீட்டர் நீளமும், கீழ் பகுதி தேவையான அளவு வளைவுடனும் தயாரிக்கப்பட்டுள்ள 12 ஜோடி, செக்மென்ட்களும், இத்துடன் பாலத்தின் மையப்பகுதிகளை இணைக்கும் வகையில் 3 மீட்டர் நீளத்தில் செவ்வக வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு செக்மென்ட் என 25 செக்மென்டுகள் இணைக்கப்பட்டு பாலம் கட்டப்படுகிறது.
இந்தப் பணி தொடங்கப்பட்டு இரண்டு தூண்களுக்கு இடையே தலா 3 மீட்டர் நீளத்தில், இரண்டு செக்மென்டுகளை இணைக்கும் பணி நடந்து வருகிறது. முழுப்பணியும் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளாக முடிக்கப்படும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் மோடி தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்! அண்ணாமலை பங்கேற்பு!

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் தலைமை காவலர் பலி

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


