"கவிதை உறவு' அமைப்பின் 41-ஆவது ஆண்டு விழாவையொட்டி 2012-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த நூல்களுக்குப் பரிசுகளும், விருதுகளும் வழங்கப்படுகின்றன.
வருகிற 18-ஆம் தேதி தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வாணி மகாலில் நடைபெறவுள்ள விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமை வகிக்கிறார்.
விழாவில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, வாழ்வியல், சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், ஆய்வு பொதுக்கட்டுரைகள், குறும்படங்கள், குறுநாவல்/நாவல், கல்வியியல்/இளைஞர் நலம் என 9 பிரிவுகளில் தலா 3 பரிசுகள் வழங்கப்படுகின்றன.
பரிசுகளை "பொற்றாமரை' அமைப்பின் தலைவர் இல.கணேசன் வழங்குகிறார். ஐ.பி.எஸ். அதிகாரி டி.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் மாலன் ஆகியோர் ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் எழுதிய நூல்களை வெளியிடுகின்றனர்.
கலைமாமணி விக்கிரமன் விருது (கவிஞர் இளையவன்), மனிதநேயச் செல்வர் விருது (முகவை மா. அ. சுந்தரராஜன், மன்னை பாசந்தி, ஜேன் வசீகரன்), கவிச் செல்வர் (தில்.பாரதி), தமிழ்மாமணி (வேலம்மாள் முத்தையா), கல்விச் செம்மல் (உஷா ராமன்) ஆகிய விருதுகளை பாரத ஸ்டேட் வங்கி மண்டல இயக்குநர் ஜே. சதகத்துல்லா வழங்குகிறார்.
இசையமைப்பாளர் தேவா, கவிஞர் முத்துலிங்கம், ஏ.எம்.எஸ். பொறியியல் கல்லூரி தாளாளர் எஸ்.சேகு ஜமாலுதீன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கா.மு.சேகர், திரைப்பட இயக்குநர் லிங்குசாமி உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வள்ளுவரைக் கலங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


