ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

சரோஜினி நாயுடு பரிசுக்கு கட்டுரைகள் வரவேற்பு

நடப்பாண்டு சரோஜினி நாயுடு பரிசுக்கான மகளிர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் குறித்த கட்டுரைகளை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :13 மே 2013, 3:25 am IST

நடப்பாண்டு சரோஜினி நாயுடு பரிசுக்கான மகளிர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் குறித்த கட்டுரைகளை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"தி ஹங்கர் புராஜக்ட்' அமைப்பு சார்பில் ஊராட்சி மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் குறித்த கட்டுரைகளுக்கு ஆண்டுதோறும் சரோஜினி நாயுடு பரிசு வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு, மகளிர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் குறித்த கட்டுரைகள் இப்போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன என ஹங்கர் புராஜக்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆங்கிலம், ஹிந்தி, இந்திய மொழிகள் என மூன்று பிரிவுகளில் கட்டுரைகளை அனுப்பலாம். ஒவ்வொரு பிரிவிலும் பரிசுக்குரிய கட்டுரைக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும். இது தவிர நாளிதழ்கள், பருவ இதழ்களில் ஊராட்சி அமைப்பில் பெண்கள் அளித்து வரும் பங்களிப்பு குறித்து வெளியான மிகச் சிறந்த கட்டுரைக்கு, அதனை எழுதிய செய்தியாளருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும்.

கட்டுரைகள் "தி ஹங்கர் புராஜக்ட்', 53-ஏ, முதல் தளம், சர்ச் வீதி, தங்கம் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை- 600040 என்ற முகவரிக்கு வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 9840666821 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.