எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அடிப்படை வசதிகள் இன்றி திணறும் தியாகராய நகர்

மக்களின் வருகைக்கேற்ப சென்னை தியாகராயநகரில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தீபாவளிப் பண்டிகை என்றால் முதலில் நினைவில் வருவது புத்தாடைகள்.

News image
Updated On :1 நவம்பர் 2013, 10:15 pm

கோபாலகிருஷ்ணன்

மக்களின் வருகைக்கேற்ப சென்னை தியாகராயநகரில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தீபாவளிப் பண்டிகை என்றால் முதலில் நினைவில் வருவது புத்தாடைகள்.

புத்தாடைகள் எடுப்பதற்கு சென்னைவாசிகளின் தேர்ந்தெடுக்கும் இடம் தியாகராய நகர். தியாகராயநகரில் பல புகழ்பெற்ற துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் ஆகியவை உள்ளன.

சாதாரண நாள்களிலே மக்கள் நெரிசல் அதிகம் காணப்படும் இப்பகுதி, பண்டிகை நாள்களில் மக்கள் வெள்ளத்திலேயே மூழ்கிவிடும். சென்னை மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் தியாகராயநகருக்கு படையெடுக்கின்றனர்.

கழிப்பிட வசதி இல்லை: மக்கள் அதிகம் கூடும் தியாகராய நகர் பகுதியில் போதிய கழிப்பிட வசதி இல்லை.

தியாகராய நகரில் பஸ் நிறுத்தத்தின் முகப்பில் ஒரு கழிப்பிடமும், போலீஸ் குடியிருப்பு சாலை அருகே ஒரு மாநகராட்சி கழிப்பிடமும், பனகல் சாலை அருகே ஒரு கழிப்பிடமும் உள்ளன.

ஆனால், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இப்பகுதிக்கு இந்த கழிப்பிடங்கள் போதுமானதாக இல்லை. போதியக் கழிப்பிட வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக முதியோர், பெண்கள் ஆகியோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இது தவிர, தியாகராயநகரில் போதுமான மருத்துவ வசதிகளும் இல்லை.

கூட்ட நெரிசலில் மக்களில் சிலருக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் முதலுதவிக்கு கூட அருகில் மருத்துவமனைகள் இல்லை.

தீர்வை எதிர்நோக்கி மக்கள்... எப்போதும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஒன்றாக விளங்கும் தியாகராயநகரில் அடிப்படை வசதிகள் இல்லாதது பொதுமக்களை முகம் சுளிக்கச் செய்கிறது.

இது குறித்து பல முறை மாநகராட்சிக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என பொதுமக்களும், வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் முறையே கிறிஸ்துமஸ், பொங்கல் ஆகிய பண்டிகைகள் வருகின்றன.

இந்த நாள்களில் தியாகராய நகரில் மக்கள் அதிகளவில் கூடுவர். இதனைக் கருத்தில்கொண்டு, தியாகராய நகர் பகுதியில் போதிய கழிப்பிடம் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.