கோயம்பேடு - பரங்கிமலை உயர்மட்டப் பாதையில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் மெட்ரோ ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையும் மொத்தம் 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
இதில், 24 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதையிலும், 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர்மட்டப் பாதையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் இரு வழித்தடத்திலும் ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2015-ஆம் நிதியாண்டில் மெட்ரோ ரயில் பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்தாலும், முதல்கட்டமாக கோயம்பேட்டில் இருந்து வடபழனி, கிண்டி வழியாக பரங்கிமலை வரை சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் வழியாக 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் சோதனை ஓட்டம்: சென்னை மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் நவம்பர் 5 அல்லது 6 -ஆம் தேதிகளில் நடைபெறும் என்று மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோயம்பேடு பணிமனையில் சோதனை ஓட்டத் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத் தண்டவாளத்தில் அண்மையில் மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயிலுக்கு மின்சாரம் செலுத்தி சோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் கோயம்பேடு பணிமனையில் முதல்கட்டமாக மேற்கொள்ளப்படும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள, 850 மீட்டர் தண்டவாளத்தில் சிக்னல் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன. ரயிலின் என்ஜின், ஏசி, பிரேக் உள்ளிட்ட அமைப்புகள், சக்கரங்கள், மின் தொடர்பு சாதனங்கள் உள்பட அனைத்தும் பரிசோதனை செய்யப்பட உள்ளன. கோயம்பேடு சோதனை ஓட்டத் தண்டவாளத்தில் 3 மாதம் சோதனை ஓட்டம் நடைபெறும்.
கத்திப்பாராவில்...: சென்னை கிண்டி கத்திப்பாராவில் கேண்டிலீவர் தொழில்நுட்பத்தில் மெட்ரோ ரயிலுக்கான மேம்பாலம் அமைக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன. இந்தப் பகுதியில் தூண்கள் இல்லாமல் மெட்ரோ ரயிலுக்கான மேம்பாலம் அமைகிறது. கோயம்பேடு - பரங்கிமலை இடையே ரயில் நிலையப் பணிகளும், சிக்னல் அமைக்கும் பணிகளும், தண்டவாளப் பணிகளும் இன்னும் சில மாதங்களில் முடிவடையவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் மோடி தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்! அண்ணாமலை பங்கேற்பு!

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் தலைமை காவலர் பலி

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

