பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதர்மண்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்

சேத்துப்பட்டு ஊராட்சியில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் முழுவதும் முட்புதர்கள் மண்டிக் கிடப்பதால் சுகாதார வளாகத்தை பெண்கள்

News image
Updated On :23 செப்டம்பர் 2013, 10:25 pm

எல். ஐயப்பன்

சேத்துப்பட்டு ஊராட்சியில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் முழுவதும் முட்புதர்கள் மண்டிக் கிடப்பதால் சுகாதார வளாகத்தை பெண்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குன்றத்தூர் ஒன்றியம், சேத்துப்பட்டு ஊராட்சியில் கடந்த 2012-ஆம் ஆண்டு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

இந்த வளாகத்தில் தண்ணீர் வசதி, மின்சார வசதி ஏதும் இல்லாததால் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் இம்மையத்தைப் பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் கிராமம்தோறும் பயன்பாடின்றி உள்ள மகளிர் சுகாதார வளாகங்களை சீரமைக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி சேத்துப்பட்டு ஊராட்சியில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் கடந்த ஆண்டு ரூ.1.10 லட்சத்தில் வண்ணம் தீட்டப்பட்டு தண்ணீர்த் தொட்டி அமைத்தல், மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டு மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டன. மேலும் கழிவறைக்குத் தேவையான சிங்குகளும் அமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டன.

சீரமைக்கப்பட்டு சுகாராத வளாகம் பயன்பாட்டுக்கு வருவதற்குள்ளாகவே சுகாதார வளாகத்தில் பொருத்தப்பட்டு மின்மோட்டார்கள் திருடு போயின.

இதையடுத்து சுகாராத வளாகத்தைப் பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததாலும், சுகாதார வளாகத்தில் மின்மோட்டார் பொருத்தப்படாததாலும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தண்ணீர் இல்லாமல் கடந்த ஆறு மாதத்துக்கும் மேலாக சுகாதார வளாகத்தைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் தற்போது பெண்கள் சுகாதார வளாகத்துக்குள் செல்ல முடியாத அளவுக்கு முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.

இதனால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திறந்தவெளியிலேயே இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர்.

எனவே பராமரிப்பு இன்றி உள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து மின்மோட்டார் பொருத்த வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.