நீதிபதிகள் அரசு அதிகாரிகள் அல்ல: பதிவாளர் ஜெனரல் பதில்
குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு கோரிய வழக்கில் நீதிபதிகள் அரசு அதிகாரிகள் அல்ல என்று நீதிமன்ற பதிவாளர் ஜெனரல்


குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு கோரிய வழக்கில் நீதிபதிகள் அரசு அதிகாரிகள் அல்ல என்று நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதிகள், போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டாஸில் கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோர் தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு கோரி கைதிகள் உரிமைகள் அமைப்பின் இயக்குநர் பி.புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவிற்கு இன்று நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக சிறப்பு அமர்வு தனியாக தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீதிபதிகள் அரசு அதிகாரிகள் இல்லை எனவும், அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...