சென்னை அடையாறில் அரசுப் பேருந்து மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
துரைப்பாக்கம் கண்ணகிநகரைச் சேர்ந்தவர் மாணிக்கம் (25). இவர் அடையாறில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மாணிக்கம் திங்கள்கிழமை காலை வேலைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். அடையாறு எல்.பி. சாலையில் பாலம் அருகே சென்றபோது, பின்னால் திருவான்மியூரில் இருந்து அய்யப்பன்தாங்கல் நோக்கிச் வந்த மாநகரப் பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால், சாலையில் விழுந்த மாணிக்கம் மீது பேருந்து ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து அடையாறு போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரான அசோக்நகரைச் சேர்ந்த ரமேஷை (47) கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

