பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கற்றலில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, தமிழ் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் முறையில் மொழியியல் சார்ந்த பயிற்சிகள் விரைவில் அளிக்கப்படவுள்ளன.
தமிழை கற்க விரும்பும் வெளிநாட்டவர்கள், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள மொழியியல் பயிற்சிக் கூடத்தில் அறிமுகநிலை, இலக்கண நடையில் மேம்பட்ட அறிவுத் திறன் என இரு முறைகளில் கணினி மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இங்கு இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பயிலும் மாணவர்கள் தமிழ் எழுத்துகளைத் தனித்தனியாகவும், சொற்களுடன் இணைந்து வரும்போதும் அவற்றை சரியான ஒலியில் உச்சரிக்கச் செய்யவும், வேற்று மொழி கலப்பு, இலக்கணப்பிழை போன்றவற்றைத் தவிர்த்து எழுதச் செய்யவதற்காகவும் அவர்களைப் பயிற்றுவிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கு மொழியியல் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
பயிற்சியின் நோக்கம்: இதுகுறித்து மொழியியல் பயிற்சிக் கூடத்தின் பொறுப்பாளரும், மொழியியல் புல பேராசிரியருமான பெ.செல்வக்குமார் கூறியது:-
சென்னை மாநகரம் மொழி ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட பகுதியாகும்.
இங்குள்ள மாணவர்கள் ஏராளமான வட்டார வழக்கு, சமுதாயம் சார்ந்த மொழிகளைப் பேசுகின்றனர். அதில், குறிப்பிட்ட சதவீத மாணவர்கள் தமிழ் எழுத்துகளை பிழையின்றி எழுதவும், உச்சரிக்கவும் சிரமப்படுகின்றனர்.
இதற்கு தீர்வு காணவும், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் கற்றலில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கவும் தமிழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளோம்.
முதல்கட்டமாக, மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்களுக்கு மாதத்துக்கு 50 பேர் வீதம் சுழற்சி முறையில் பயிற்சி அளிக்கப்படும்.
என்னென்ன பயிற்சிகள்? டிஜிட்டல் முறையில் "செனாகோ என்ற மென்பொருளின் உதவியுடன் உருபன் (ஙர்ழ்ல்ட்ங்ம்ங்), அடிச்சொல் (தர்ர்ற்), ஒட்டுநிலைச் சொல் (நன்ச்ச்ண்ஷ்), பொருட்குறியாக்கம் (நங்ம்ஹய்ற்ண்ஸ்ரீ உய்ஸ்ரீர்க்ண்ய்ஞ்), இலக்கணக்குறியாக்கம் (எழ்ஹம்ம்ஹற்ண்ஸ்ரீஹப் உய்ஸ்ரீர்க்ண்ய்ஞ்), ஒலிக்குறியாக்கம் (டட்ர்ய்ர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப் உய்ஸ்ரீர்க்ண்ய்ஞ்) போன்ற மொழியியல் கோட்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மேலும் பேச்சுப் பகுதிகள் (டஹழ்ற்ள் ர்ச் நல்ங்ங்ஸ்ரீட்) குறித்த விளக்கங்களும் அளிக்கப்படும்.
இதற்காக ஆசிரியர்களுக்கு 14 கணினிகளும், பயிற்சியாளர்களுக்கு இரு கணினிகளும் புதிதாக நிறுவப்பட்டுள்ளன.
பேராசிரியர்கள் க.சுசீலா, ந.சுலோச்சனா, தசரதன் ஆகியோர் பயிற்சி அளிக்கவுள்ளனர். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த தமிழாசிரியர்களுக்கு மொழியியல் பயிற்சி விரிவுபடுத்தப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


