சென்னையில் முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு குறைந்துவரும் நிலையிலும், கோடை காலம் முடியும் வரை பெரும் அளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிலைமை சமாளிக்க முடியும் என குடிநீர் வாரியம், பொதுப்பணித் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
1.2 டிஎம்சி இருப்பு: சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஆகிய நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 டிஎம்சி (11,057 மில்லியன் கன அடி) ஆகும். இவற்றில் கடந்த மார்ச் 1 -ஆம் தேதி மொத்தம் 1.7 டிஎம்சி தண்ணீர்தான் இருப்பு இருந்தது. இந்தநிலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 1) நிலவரப்படி சோழவரம் தவிர்த்து மற்ற 3 ஏரிகளில் மொத்தம் 1.2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் ஏறக்குறைய 0.5 டிஎம்சி தண்ணீர் குறைந்துள்ளது.
இதனால் ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், அந்தநிலை ஏற்படும்போது அதிக விலை கொடுத்து குடிநீரை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்ன அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தப் பிரச்னையைத் தீர்க்க குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஏரிகளை மட்டும் சார்ந்திருக்கவில்லை: இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தினமும் 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. குடிநீர் ஆதார ஏரிகளில் குறைவான நீர் இருப்பு, நிலத்தடி நீரின் அளவு குறைவு போன்ற காரணங்களால் தற்போது தினமும் 50 கோடி லிட்டர் முதல் 53 கோடி லிட்டர் வரைதான் குடிநீரை விநியோகம் செய்து வருகிறோம்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள ஏரிகளில் இன்னும் சில நாள்களில் தண்ணீர் முற்றிலுமாக வறண்டு விடும். அதனால் அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் இருக்கும் என்று கடந்த ஒரு மாதமாக பொதுமக்களிடையே தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் சென்னையில் உள்ள ஏரிகள் தவிர பிற குடிநீர் ஆதாரங்கள் முற்றிலுமாக தீர்ந்துவிடவில்லை.
என்னென்ன வழிகள்: சென்னையின் குடிநீர் தேவைக்காக புழல் உள்பட நான்கு ஏரிகளை மட்டும் நம்பியிருக்கவில்லை. அவற்றிலிருந்து சாதாரண நாள்களில் தினமும் 22 மில்லியன் கனஅடியும், கோடைகாலத்தில் 25 மில்லியன் கன அடியும் மட்டுமே குடிநீருக்காக எடுக்கிறோம்.
இதுதவிர நெம்மேலி, மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து தினமும் தலா 100 மில்லியன் லிட்டர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளிலிருந்து 120 மில்லியன் லிட்டர், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் 50 மில்லியன் லிட்டர், சென்னையைச் சுற்றியுள்ள கல்குவாரிகள், போரூர் ஏரி என பல்வேறு குடிநீர் ஆதாரங்களை பயன்படுத்தி வருகிறோம்.
55 நாள்களுக்கு சமாளிக்க முடியும்: மேலும் 4 ஏரிகளில் தற்போதுள்ள குடிநீரை (1,269 மில்லியன் கன அடி) அடுத்த 55 நாள்களுக்கு பயன்படுத்த முடியும். அதாவது மே மாதம் 4 -ஆவது வாரம் வரை குடிநீர் பிரச்னையைச் சமாளிக்க முடியும். அதன் பிறகு இந்தப் பிரச்னையை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பது குறித்து தற்போது தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த இரு வாரங்களுக்கு மேல் குடிநீர் வாரியத்திடம் உள்ள லாரிகள் மூலமாக தினமும் 6,000 முறைகளுக்கு மேல் குடிநீரை விநியோகித்து வருகிறோம்.
தற்போது கூடுதலாக 250 லாரிகளை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். எனவே பொதுமக்கள் குடிநீர் பிரச்னை தொடர்பாக வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


