சுரங்கப் பாதையில் சிக்கிய தனியார் பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை, தியாகராயநகரில் சுரங்கப் பாதையில் தனியார் பேருந்து வியாழக்கிழமை சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Updated on
1 min read

சென்னை, தியாகராயநகரில் சுரங்கப் பாதையில் தனியார் பேருந்து வியாழக்கிழமை சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேற்கு மாம்பலம் பிருந்தாவன் நகரில் இருந்து ஒரு தனியார் பேருந்து தியாகராய நகர் நோக்கி வியாழக்கிழமை மாலை வந்தது. அந்த பேருந்து, கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்ட துரைசாமி சுரங்கப் பாதையில் சென்றது. அப்போது அந்த பேருந்தின் மேற்பகுதியில் உள்ள லக்கேஜ் வைக்கும் பகுதி, சுரங்கப் பாதையின் மேல் உள்ள பாலத்தில் சிக்கியது. இதனால் விபத்தைத் தவிர்ப்பதற்காக, பேருந்து அப்படியே அங்கு நிறுத்தப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நெரிசலில் சிக்கின.
பின்னர் பேருந்து பின்னோக்கி இயக்கி மீட்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதனால் 30 நிமிடத்துக்கு மேல் அங்கு நெரிசல் நிலவியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com